பக்கம்:அரை மனிதன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

71


ஆசை தனக்குப் பதவி வேண்டும் என்பது. தன்னை 'ரவுடி' என்று சொன்னால் போதும். போலீசுகாரர்கள்கூட அவனிடம்தான் நன்றாகப் பழகுவார்கள். அவன் துணிச்சல்காரன் என்பதால் நல்லவர்களுக்கு எல்லாம் அவனைக் கண்டால் பயம்தான்.

அவனைச் சுற்றி இந்தக் கூட்டமே சுற்றுகிறது. அவன் ஒரு வீரன். அவனை யாருமே எதிர்க்க மாட்டார்கள். அவன் தைரியத்தில் இந்தச் சில்லரை தேவதைகள்கூட கொஞ்சம் துள்ளும்; பிறகு அடங்கும். அவனுக்கு எதிரியும் இருந்தான். அறுப்புகார கந்தன் என்பது அவன் பெயர். அவன் கையில் சின்ன பிளேடு போன்ற கத்திதான் வைத்திருப்பான். அவன் எடுத்த உடனே ஒரு அறுப்புதான். கடைக்காரர்களுக்கெல்லாம் ஒரே பயம். அவன் வந்து கேட்டதை உடனே கொடுத்து விடுவார்கள்.

அதே தொழிலில் ரங்கன் இருந்தான். அதனால் இரண்டு பேருக்கும் அடிக்கடி தகராறு வரும். திடீர் என்று சோடா புட்டிகள் பறக்கும். தெருவில் கால் வைத்து நடக்க முடியாது. இவன் பக்கம் பத்துபேர். அவன் பக்கம் பத்துப் பேர். பரம்பரைகள் வளரும். ஒருவன் சால்பட்டா பரம்பரை என்பான். மற்றவன் கோல்பட்டா பரம்பரை என்பான். ரவுடிகளில் பரம் பரைகள் அமைந்தன.

குத்து, கொல் இதெல்லாம் பழகிக் கொள்வார்கள். பழங் காலத்து வீரம் இவர்கள் பயிற்சிகளில் இடம் பெற்றது. வீர பரம்பரையில் உதித்தவர்கள் போல் தங்களைப் பழகிக் கொள்வார்கள்.

ரங்கன் அம்மாக்கண்ணு மீது கண் வைத்திருப்பதைத் தெரிந்து கொண்டேன். கந்தன் அந்தப் போட்டியில் பங்கு பெற்றான். ஒரு நாள் நடு ரோட்டில் அவன் நன்றாகக் குடித்து விட்டு அவளை இழுத்தான்.

அப்பொழுதுதான் அம்மா கண்ணுவின் உயர்வு எனக்குத் தென்பட்டது. பெரிய அரசு குமாரிக்குக்கூட சுயம்வரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/73&oldid=1461970" இலிருந்து மீள்விக்கப்பட்டது