பக்கம்:அரை மனிதன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

 அரை மனிதன்


வராவிட்டால் என்ன! மாதாமாதம் அனுப்பிவிடுகிறான். அவனைப் படிக்க வைத்தது வீண் போகவில்லை. மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான். மாமனார் வீடு பெரிய இடம் (அதாவது மைல் கணக்கில் அல்ல; எல்லாம் அடி கணக்குதான்) எல்லாம் அவர்களே கவனித்துக் கொள்கிறார்கள். அவள்தான் ஒரு மாதிரி. தன் புருஷன் சம்பாதனை இந்தப் பக்கம் வரக்கூடாது. அதிலே அவள் கரார். 'அவங்க வீட்டு நாய் மட்டும் மாதம் இருநூறு ரூபாய் சாப்புடுது. அது கொடுத்து வைத்தது. அதுதான் காவல். அந்தப் பெரியவன் எப்பவோ சொல்லிவிட்டானாம். 'உங்கள் வீட்டில் திருடப்போகிறேன்' என்று. அதுமுதல் அவளுக்கு அதுவே பயம். கனவிலேகூட “திருடன் நொண்டி' என்று இந்த இரண்டு சொற்களை அவள் சொல்லிக் கொண்டிருக்கிறாளாம். அவன் எவ்வளவோ சமாதானம் சொல்லிச் சொல்லிப் பார்கிறான். 'நொண்டி எப்படித் திருட முடியும்? நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிப் பார்த்தான். ஒன்றும் முடியவில்லை. அதெல்லாம் முடியாது. அல்சேவியன் நாய் கட்டாயம் ஒன்று தேவை என்று ஒற்றைக் காலால் நின்றாளாம். (அவள் நொண்டியல்ல என்னைப் போல ஒற்றைக் காலில் நிற்க; அதாவது நிலையாக நின்றாள் என்பது அர்த்தம்) அதற்குப் பிறகுதான் அவன் அந்த நாயே வாங்கினானாம். 'இந்த நொண்டிக்கு ஏன் இப்படி புத்தி கெட்டுவிட்டதோ தெரியலை. இப்படி ஏன் சொல்லணும்' என்று அம்மா சொல்லுகிறாள். போதாக்குறைக்கு எங்கேயோ பங்களாவிலே தனிவீடாம். ஆம்படையான் வேலைக்குப் போயிருந்தாராம். புள்ளை பள்ளிக்கூடம் போயிருந்தானாம். வேலைக்காரி கடைக்குப் போயிருந்தாளாம். இப்படி ஒவ்வொருவரும் ஒரு இடத்துக்குப் போனதுக்கப்புறம் பட்டப்பகலிலே வீடு புகுந்து அவளைக் கொலையே செய்து விட்டானாம். போதாக்குறைக்கு இந்தச் சமாசாரத்தை எல்லாம் பத்திரிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/54&oldid=1156768" இலிருந்து மீள்விக்கப்பட்டது