பக்கம்:அரை மனிதன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அரை மனிதன்


நான் மறுபடியும் எங்கள் வீட்டுக்கு எப்பொழுது போவேன் என்று துடித்தேன். என்னோடு பழகிவிட்ட காரணத்தால் 'மே' அவர்களோடு உறவு கொள்ள முடியவில்லை. அவளும் என்னைப்போல் பஞ்சத்து ஆண்டிதானே.

அந்த நெக்லஸ் என் தம்பி வீட்டிலிருந்து கொண்டு வரப் பட்டது. அதை அவளிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற கடமை உணர்வு எனக்கு ஏற்பட்டது.

"நான் அதைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன்."

"அவனுக்கு நான் என்ன பதில் சொல்வது?"

"அது திருட்டுச் சொத்துத்தானே"

"அது திருப்பிக் கொடுக்காவிட்டால்தான் நான் அவன் குத்தகைப் பொருள் ஆகிவிடுவேன்."

"இல்லாவிட்டாலும் அவனுக்கு அடிமையாகத் தானே போகிறாய்?"

அந்த இரண்டு துளிக் கண்ணீரின் அர்த்தம் அப்புறம்தான் தெரிந்து கொண்டேன். நாம் உலகத்தில் பழகும்பொழுது அண்ணன் தம்பியாகப் பழகுகிறோம். அப்படி வாய் விட்டுச் சொல்கிறோம். அதே போல் தாயும் மகளும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், உள்ளத்தில் அப்படி நினைப்பது இல்லை. அக்கா தங்கை போல் பழகினோம் என்று சொல்கிறோம். ஆனால் உண்மையான உறவும் இருப்பது இல்லை. உறவு வேறு; பாசம் வேறு என்பதை அவள் கண்ணீர்தான் உணர்த்தியது. அவள் என்னை அண்ணன் என்று நினைத்தாள். அதில் பாசமும் இருந்தது உறவும் இருந்தது. நான் அவளைத் தங்கை என்று நினைத்தேன். அதில் பாசம் இருந்தது. ஆனால் உறவு இல்லை.

அவள் என்னைக் குறிப்பிட்டுப் பேசியபோது அதை நான் உணர்ந்து கொள்ளவில்லை. அதற்காகத்தான் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/78&oldid=1461975" இலிருந்து மீள்விக்கப்பட்டது