பக்கம்:அரை மனிதன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. சீனிவாசன்

119


 "அதைக் கொண்டு போய் அந்த அம்மையாரிடம் கொடுக்கச் சென்றேன். அவர்கள் என் சேவைக்குப் பாராட்டினார்கள். திருட்டுப் பட்டம் சூட்டி என்னை ஜீப் வண்டியில் ஏற்றிப் பெரிய கவர்னரை அனுப்புவதை போலப் போலீசோடு அனுப்பி வைத்தார்கள்.”

"வீடு வாசல் இல்லாமல் எப்படி எப்படியோ காலம் கடத்திய எனக்கு இந்த அழகிய போலீசு நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்கள்."

“இங்கே இவர்கள் மிகக் கண்ணியமாக நடத்தினார்கள். குற்றவாளிகளை வெறுக்காத மனிதர்கள் யாராவது இருக்கிறார்கள் என்றால் அது போலீசுக்காரர்கள்தான். அவர்கள் பிழைப்பே இவர்களால்தானே நடக்கிறது. நோயாளியை எந்த வைத்தியரும் வெறுப்பதில்லை. அந்த நோயோடுதான் அவர் போராடுவார் இவர்களும் என்னை எந்தப் பிரிவில் சேர்ப்பது. எந்தத் தண்டனையைச் சிபாரிசு செய்வது என்பதில்தான் ஆராய்ச்சி செய்வார்கள். எது அதிகம்? ஒரு குற்றவாளியைச் சிறையில் தங்க வைக்க உதவும் என்று யோசித்துப் பார்த்து உதவுவார்கள்.

"இடையில் எனக்கு ஒரு சின்ன ஆசை. இவளை இப்படி நெக்லசுக்கும் காசுக்கும் விலைக்கு விற்காமல் இவளுக்கு ஓர் ஆம்படையானைத் தேடித்தர வேண்டும் என்று ஆசைப் பட்டேன். என் தம்பி இவளை வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவள் ஆசைப்பட்டது ஒர் ஆம்படையான், இவன் எப்படி அவளுக்கு ஆம்படையான் ஆக முடியும்."

"ஆம்படையான் என்றால் என்ன அர்த்தம். அகமு டையான் என்று தான் அர்த்தம்; அதாவது அவன் அந்த வீட்டில் சதா தங்கி இருக்க வேண்டும். யாராவது ஐயா இருக்கிறாரா என்று கேட்டால் உடனே வெளியே வரவேண்டும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/121&oldid=1462018" இலிருந்து மீள்விக்கப்பட்டது