பக்கம்:அறநெறி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. நாலடியார் நல்லுரை

1. ஆறுவது சினம்

மதித்திறப் பாரும் இறக்க: மதியா மிதித்துஇறப் பாரும் இறக்க-மிதித்தேறி ஈயும் தலைமேல் இருத்தலால் அ.தறிவார் காயும் கதமின்மை கன்று

-நாலடியார்; சினமின்மை :1 (61

அறநெறி மேற்கொண்டு, அறநெறியினைக் கடைப் பிடித்தொழுகி, அறநெறியினைப் போதித்து வாழ்ந்தவர் கள் சமண முனிவர்கள் ஆவர். இல்லற நெறியில் ஈடுபட்டு வாழாத இம் முனிவர்கள் இல்லற இன்பம் சிறக்க, இல்லம் பொலிவும் பொற்பும் பெற்றுத் திகழப் போதித்துச் சென்ற பாக்களின் தொகுதியே நாலடியார் என்னும் நல்லற மருந்தாகும். அறத்துறையில் ஒரு மனிதனை ஆற்றுப் படுத்தும் திறல்வாய்ந்த நாலடியாரின் நலமுறு பாக்கள், மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்னும் வழியினைப் புலப்படுத்தி நிற்கின்றன.

கோபம் பொல்லாதது என்பர். சினமடக்கக் கற்றல் அரிய கலை என்பர் ஆன்றோர். சினமின்மை என்னும் பண்பு வாய்த்து விட்டால் இவ்வையகத்தில் வெற்றி முரசு கொட்டலாம்.

குணமென்னும் குன்றேறி கின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது (குறள் 29)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/54&oldid=586936" இலிருந்து மீள்விக்கப்பட்டது