பக்கம்:ஆண்டாள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

ஆண்டாள்


யும் தன்னுள் கொண்டுள்ளதோ, அங்ஙனமே இந்நூலின் "மார்கழிக் திங்கள் எனத் தொடங்கும் முதல் பாசுரமும் மற்ற முப்பது பாசுரங்களின் பொருளையும் தன்னகத்துக் கொண்டுள்ள இவ்வொரு பாசுரத்தைக் கொண்டே எல்லாப் பொருள்களையும் அறியலாம். மற்றப் பாசுரங்கள் இதை நன்கு விளக்கி அழகுபடுத்தா நிற்கின்றன. இந்நூல் அறிஞருக் குப் பெருவிருந்தாகும். அன்றியும், இந்நூலை ஒரு விதைக்கு ஒப்பிடலாம். ஏன்? வேர், இலை, பூ, காய், கனிகளைத் தன்னுள் அடக்கிக்கொண்டு சிறு உருவத்தில் காணப்படும் விதையைப் போன்று இதுவும் பல பொருள்களைப் பொதிந்து வைத்துக் கொண்டு சிறுவடிவில் காட்சி அளிக்கிறது; எளிய நடையும், உயர்நோக்கும் உள்ளது; தொடுந்தோறும் நீர் ஊறும் மணற்கேணியன்ன. ஆயுந்தோறும் பொருள் சுரக்கும் இயல்புடையது. எளியார்க்கு எளியது; அரியார்க்கு அரியது. அழகின் அமைப்பு; ஆனந்த ஊற்று; யாப்பின் இலக்கணம்; அணிக்குச் சான்று; ஆன்ம ஆக்கம், அறநிலையம்; பொருட்பேழை; இன்பத்தேக்கம்; விடுதலை வேட்கை: பாகவதர் பாராயணம்; மார்கழியின் மாண்பு; தூய நோன்பு: பிரபந்தர் உயிர் நிலை வைணவத் தத்துவம்; கைங்கரியத்திலுற்ற களையறுக்கும் அரிவாள்; அஞ்ஞான மயக்கங்களுக்கு மருந்து; கடவுளைக் காட்டும் விளக்கு இறைக் காதலை ஊட்டும் இன்னமுது. இதன் சீர்மை இதழிலடங்குவதன்று. இதன் ஆராய்ச்சி தனிப்பட்டதாகும். நூலைக் கொண்டு ஆசிரியர் பெருமையை உணர்தற்கு இஃதொரு தக்க கருவியாகும்" என்று பாராட்டியுள்ளமை காண்க.

மேலும் தாய்லாந்தில் மன்னர் முடிசூடிக் கொள்ளுங் காலையில் திருவெம்பாவை இசைக்கப்படுகிறது என்பர் அறிஞர்.தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்.

"இந்நூலில் பாயிரம், தோழியரைத் துயிலுணர்த்தல், எம்பெருமானையடைந்து பயன்பெறுதல் ஆகிய மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/88&oldid=1462083" இலிருந்து மீள்விக்கப்பட்டது