பக்கம்:ஆண்டாள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

63


உள்ளத்தை ஊன்றவைத்தவள் என்னு மிடத்தை ப்ராமணிகர்கள் இசையும்படி மூதலிக்கிறோம், காண்மின்' திருப்பாவை முதற்பாட்டில் "நீராடப்போதுவீர் போதுமினோ' என்று நீராட வருகிறவர்களெல்லீரும் வாருங்களென்று அழைத்து நாலாம் பாட்டில் மேகத்தையும் விளித்து "நாங்களும் மார்கழி நீராட வுலகினில் பெய்திடாய்' என்று மழைபெய்ய நியமித்திருக்கிறாள். இவற்றைப் பார்க்கும் போது நீராடுவதற்கே ஆண்டாள் (அல்லது ஆய்ச்சிகள்) புறப்படுவதாகவும் நீராடுவதற்கே தோழிகளையும் அழைப்பதாகவும் நீராடுவதற்கு வேண்டிய தீர்த்தஸ்ம்ருத்தி யுண்டாவ தற்காகவே மழைபெய்ய மேக தேவதையை நியமிப்பதாகவும் தெரிய வருகிறது. இதுவே உண்மைப்பொருளாகில் இவர்களெல்லாருங்கூடி ஒரு பொய்கைக்கரைக்குச் சென்றிருக்க வேண்டும். நீராடுமிடம் பொய்கையன்றோ. இவர்கள் ஒரு பொய்கைக்கரையில் சென்று சேர்ந்ததாகத் திருப்பாவையில் ஒரு பாட்டிலுமில்லை. ஶீ நந்தகோபருடைய திருமாளிகைக்குச் சென்று அங்கு 'நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பனை யுணர்த்தி நப்பின்னைப் பிராட்டியையுணர்த்தி அவர்களைத் தோத்திரஞ் செய்து, சிற்றஞ்சிறு காலையெழுந்து இங்கு நாம் வந்தது எதற்காகவென்னில், "உன்றன்னோடுற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோமென்று விண்ணப் பம் செய்வதற்காகவேயென்று தலைக்கட்டியிருக்கிறார்கள். இப்படி திவ்ய தம்பதிகளிடம் சென்று ஸேவிப்பது தான் இவர்கள் தாம் கொண்ட மார்கழி நீராட்ட மென்று நன்கு விளங்கிற்றாயிற்று. ஆகவே, "நீராடப் போதுவீர் "நாங்களும் மார்கழி நீராட 'குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே யெம்மை நீராட்டு "மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்’ என்கிற பாசுரங்களில் ப்ரஸ்தாவிக்கப்பட்ட நீராட்டமனது தண்ணிரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/65&oldid=959388" இலிருந்து மீள்விக்கப்பட்டது