பக்கம்:ஆண்டாள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

155


காண்பதற்கு அழகாகவே தோற்றமளிக்கும்; ஆனால் உடைத்துப் பார்த்தால்தான் உள்ளீடு ஒன்றுமில்லாதது தெரியும் 'வேழம் உணட விளங்கனி' என்றும் கூறப்படும். அவ்வாறு பெயரளவிற்கு வாழும் என் காதல் நோயினை நாரணற்குத் தெரிவியுங்கள் என்கிறார் ஆண்டாள்.

சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த
தண்முகில்காள்! மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே
நிரந்தேறிப் பொழிவீர்காள்
உலங்குண்ட விளங்கனிபோல்
உள்மெலியப் புகுந்து என்னை
நலங்கொண்ட நாரணற்கென்
நடலைநோய் செப்புமினே90

எல்லோருக்கும் கதியாக வரம் வந்து வாழ்வளிக்கும் வள்ளலாக விளங்குகிறான் வேங்கடத்து எம்பெருமான். அத் தகையவன் ஒரு பெண்கொடி (பெரியாழ்வார் பெற்ற பெண் கொடியாம் ஆண்டாளை வதை செய்தார் என்னும் சொல் எழுமானால் அதனை உலகத்தார் எவ்வாறு மதிப்பரோ அறியேன் என்கிறார் ஆண்டாள்.

மதயானை போலெழுந்த
மாமுகில்காள். வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்!
பாம்பணையான் வார்ததையென்னே,
கதியென்றும் தானாவான்
கருதாது, ஓர் பெண்கொடியை
வதைசெய்தான்! என்னும்சொல்
வையகத்தார் மதியாரே.91

ஆண்டாள் ஆண்டவன் அர்ச்சையாய் அமர்ந்திருக்கும் தலங்கள் பலவற்றுள்ளும் திருமாலிருஞ்சோலை, திருவேங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/157&oldid=1462158" இலிருந்து மீள்விக்கப்பட்டது