பக்கம்:ஆண்டாள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

173


யும் நினையாமல் எம்பெருமானுடைய கைத்தலமாகிற உயர்ந்த இடத்திலே குடிபுகுந்து, கொடியவர்களான அசுரர்கள் துன்பப்படும்படி ஒலியெழுப்பும் மேன்மையினைப் பெற்றுள்ளாய். உன் பெருமையே பெருமை."

கடலில்பி றந்துக ருதாது பஞ்சசனன்
உடலில்வ ளர்ந்துபோ யூழியான் கைத்தலத்
திடரில்கு டியேறித் தீயவ சுரர்கள்,
நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே!116

உயர்ந்த உள்ளம் உயர்ந்த காட்சிகளையே காணும் என்றபடியும் "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை' என்னும் தொல்காப்பினார் உவமை பற்றிய கருத்துப்படியும் ஆண்டாள் மனத்திரையில் பளிச்சிடும் ஓர் அழகுக் காட்சி வருமாறு :

இளவேனிற் காலத்து இன்ப முழுநிலா பெரிய உதயகிரி மேல் தோன்றினாற்போன்று, பால்வெண் சங்கமும் வடமதுரையிலுள்ளார்க்கு அரசனான கண்ணபெருமானு டைய திருக்கையில் குடிபுகுந்து மேன்மை கொள்ள வீற்றிரா நின்றது.

தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல், நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்.
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே!117

"ஏ வலம்புரிச் சங்கே! கண்ணபிரானுடைய திருக்கையில் சந்திரமண்டலம் போல இடைவிடாது இருந்து கொண்டு அவனுடைய காதில் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் எப் போதும் விளங்குகின்றாய். செல்வத்தில் மிக்கவனென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/175&oldid=1462176" இலிருந்து மீள்விக்கப்பட்டது