பக்கம்:அறநெறி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IOE அறநெறி

மேற்கொள்ளப்படுகின்றன? என்றெல்லாம் வினாக்கள் கேட்டுக்கொண்டார்.

சிறுவன் நரேந்திரன் உள்ளத்திலேயே தெளிவு பிறந்தது. திருவள்ளுர்ை பெருமான்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்

-குறள் 972 என்று கூறியபடி, இறைவன் படைப்பில் மனிதர் அனைவரும் ஒன்றே; வாழும் நெறியாலேயே ஒவ்வொரு வன் உயர்வதும் தாழ்வதும் அமைகின்றனவாதலால் விவேகானந்தர் நெஞ்சமும் அனைவரையும் ஒன்றாகப் பார்த்து நேசிக்கும் அன்பால் நிறைந்தது. எனவேதான் அவர் மந்திரச் சொல் உலகை ஈர்த்தது அமெரிக்கப் பெரு நாட்டில் நடைபெற்ற பல்வேறு சமயங்களின் மாநாட்டில் (Parliment of Religious) tu6903ougy &uouti, semando &ntri fig; வர்கள், பல்வேறு இனத்திற்குச் சொந்தக் காரர்கள், பல்வேறு மொழி பேசுவோர், பல்வேறு நடையுடை பாவனைகள் உடையோர் கலந்துகொண்டனர். இவ் அனைவரும் விவேகானந்தரின் ஆணித்தரமான அருள் மொழியை ஆர்வத்தோடு செவிமடுத்துக் கேட்டனர். உலகனைத்தையும் தழுவிய உயர்ந்த பேச்சாக விவேகானந்தரின் வீரவுரை அமைந்தது. இந்தியப் பெரு நாட்டின் ஆன்மீக ஞான விளக்கின் ஒளியினை உலகோர் விவேகானந்தரின் உரைகளின் வழியே கண்டனர். கிழக்கிற்கும் மேற்கிற்கும் உறவுப்பாலம் எழுந்தது.

விவேகானந்தரின் பிஞ்சு நெஞ்சிலே எழுந்த பெரு மொழி சாதி வேற்றுமைகள் இல்லையென்பது. இந்நிலை இனியாவது பாரதப் பெரு நாடெங்கும் பரவ வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/104&oldid=586840" இலிருந்து மீள்விக்கப்பட்டது