பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

அன்பு வெள்ளம்



“என்ன்சிடம் இன்னும் கொஞ்சம் அணம் மட்டும் இருக்குமே யானால், ஏழை எளியருக்கெல்லாம் உதவி செய்வேன்” என்று சிலர் சொல்லுகிறார்கள்.

உங்களிடம் உள்ள சிறிய தொகையினைக் கொடுத்து இப்போது உதவி செய்யவில்லை என்றால், நிரம்ப உங்களிடத்தில் செல்வம் வரும்போது இல்லாத மற்றவர்க்கு உதவி செய்ய முடியுமா என்றால் முடியாது. இப்போது, ஏழை எளியவரின் துன்பங்களில் பங்கு கொள்ளவில்லை என்றால், பிறகு எப்போதும் அவர்கள் துன்பங்களில் பங்குகொண்டு அவர்களைக் கரையேற்ற முடியாது: கை தூக்கிவிட முடியாது. அன்பு ஒரு பிடிச் சோற்றையும் பங்கிடும்; ஒரு பிடி அரிசியினையும் வாரிக் குறைத்துவிடும்.

இன்று, உங்களைப் போன்ற நிலையில் உள்ளவருடைய மக்களின் துன்பத்தைச் சுமையை மட்டும்.நீங்கள் ஏற்றுக் கொள்ள முன் வந்திருக்கிறீர்கள். அதுபோதும். பிறர் அன்புக்கு உங்களை ஒப்படையுங்கள். அந்த அன்பு இயேசு உலகுக்கு அளித்த பொற்பொருளும் நற்பொருளும் போல உங்கள் சார்பில் ஆனதைச் செய்யும்; அரும்பணி ஆற்றும், அடுத்தவர் சுமையைக் குறைக்கும் உங்களை ஆளும் அன்பு!

வஞ்சனையாளர்களைக் கள்ள வேடதாரிகளை அன்புடன் விரும்புவது என்பது அத்துணை எளிதான் செயல் அன்று. ஆனால், இயேசு அன்பு காட்டினார் அத்தகைய கள்ள வேடதாரி யிடம்! நீங்களும் அப்படிச் செய்யலாம்; செய்ய முடியும்.

விருந்து அளித்த போது உணவு அருந்தும் மேசையினைச் சுற்றி அமர்ந்தவர்களில் யூதாசுகாரியத்து என்னும் பெயர் கொண்டி யூதாவும் அமர்ந்து இருந்தான். முப்பது காசுகளுக்குத் தன்னைக் காட்டிக் கொடுத்திடத் திட்டம் போட்டிருந்ததையும் இயேசு கிறித்து அறிந்துவிைத்திருந்தார். அப்படியிருந்தும் காட்டிக் கொடுக்கவிருந்த யூதாவிடம் அன்பு காட்டினார்இயேசு.

அன்புப் பணியாற்றித் தம் கைகளில் ஆணிகளை அடித்த வனிடம் கூட அன்பு காட்டினார் இயேசு.

அத்தகைய அன்பின் திருவாகிய இயேசு கிறித்து ஆற்றிய அன்புப் பணிகளை நீங்களும், ஆற்றிடலாம். எப்படி என்பீர்கள்! இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கிற உங்களில் இயேசு நிலைத்திருக்கிறார். ஆகவே, இயேசுவின் இயல்பான அன்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/86&oldid=1219519" இலிருந்து மீள்விக்கப்பட்டது