பக்கம்:ஆண்டாள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2

பாவை பாடிய பாவை


பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம னைத்துக்கும் வித்தாகும் - கோதைதமிழ்
ஐயைந்து மைந்து மறியாத மானிடரை
வையஞ் சுமப்பதும் வம்பு.


"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கண்ணபிரான் கீதையில் சொல்லியிருக்கிறார். எனவே மார்கழி மாதம் என்றவுடனேயே மாசற்ற கண்ணனின் நினைவு வருவது போலவே, அம்மாத முழுவதும் பாடக் கூடிய திருப்பாவைப் பாடல்களையளித்த திருப்பாவைச் செல்வியாக விளங்கும், பாடியருளிய பாவையாக விளங்கும் ஆண்டாளுடைய நினைவு வாராமற் போகாது. திருப்பாவை சமய உலகில் மட்டுமின்றி இலக்கிய உலகிலும் ஈடும் இணையுமற்றுத் திகழ்கின்றது. "வேதம் அனைத்திற்கும் வித்தாகும்' என்பது பெரியோர்களின் அனுபவ மொழி. இவ்வித்திலிருந்தே வேர், இலை, பூ, காய், கனி முதலியன கிடைத்தல் கூடும். ஐயைந்தும் ஐந்தாய் அதாவது முப்பது பாசுரங்களைக் கொண்டதாய்த் திகழும் திருப்பாவையை அறியாத மானிடர்களை இந்த உலகமானது தாங்கிக் கொண்டிருப்பது பெரும் குறை என்ற அளவில் பெரியோர்கள் கருதினர் என்றால் வைணவ இலக்கிய உலகில் திருப்பாவை பெறும் இடம் தெற்றெனப் புலனாகின்றது.இம்மண்ணிற் பிறந்தாரில் திருப் பெரும்புதுார்ப் பிரான் இராமாநுசர்தான் அறிவிற் சிறந்தவர் என்று என் ஆசிரியப் பெருந்தகை பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் பன்முறை கூறக் கேட்டுள்ளேன். அத்தகு அறிவுத்திறனும் சமயத்தெளிவும் பெற்றிருந்த எம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/63&oldid=983608" இலிருந்து மீள்விக்கப்பட்டது