பக்கம்:ஆண்டாள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

ஆண்டாள்


என்று கேட்கின்றார்.

அதுபோல் கீழ்க்காணும் ஆண்டாளின் பாடலில் இனிய சோறு, பாலமுது ஆகிய இரண்டனைக் குயிலுக்குத் தந்து, அதற்குப் பதிலாக அக்குயிலிடமிருந்து ஒன்றே ஒன்றை உலகளந்த மாயன் கண்ணபிரான் இதோ வருகிறான் என்ற ஒரே ஒரு சொற்றொடரைக் கூவுமாறு கேட்டுக் கொள்கிறார்.

மென்னடை யன்னம் பரந்து விளையாடும்
வில்லிபுத் தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசையி னாலென்
பொருகயற் கண்ணினை துஞ்சா
இன்னடி சிலொடு பாலமு தூட்டி
எடுத்தவென் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே!
உலகளந் தான்வரக் கூவாய்51

மேலும் அத்தத்துவங்கடந்த தயாபரன் வருகிறான் என்று கூவினால் தம் தலையல்லது கைம்மாறாகத் தருவதற்கு வேறொன்றுமில்லை என்றும், பெருந்தரும வசப்பட்ட செயல் அதுவே ஆகுமென்றும், குறிப்பிடுகின்றார்.

தத்துவ னைவரக் கூகிற்றி யாகில்
தலையல்லால் கைம்மாறி லேனே52

ஆழியும் சங்குமொண் தண்டும்
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ
சாலத் தருமம் பெறுதி53

இப்பத்தின் எட்டாம் பாட்டு நயஞ்சிறந்து காணப்படுகின்றன.

"நான் பைங்கிளி வண்ணனாம் சிரீதரன் என்பவனின் பாச வலையிற்பட்டிருந்தேன். ஏ! குயிலே! நீ இதைச் சற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/146&oldid=1462148" இலிருந்து மீள்விக்கப்பட்டது