பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

67


சேர்க்கப்படுவர். மன்பதையின் மகிழச்சி அவர்களில் நிறைவேற்றப்படும்.

கடவுள் நம்மில் அன்பு கொண்டது போலே நாமும் ஒருவரில் மற்றொருவர் அன்பு கூர்ந்திடக் கடமைப்பட்டுள்ளோம். இந்த முறையினைக் கடைப்பிடிப்பவர் யாராயினும் அவர் எந்தவிதத் தவறையும் எண்ணவும் மாட்டார்; செய்யவும் மாட்டார் என்பது திண்ணம். அன்பு நெறியில் நடப்பவர் - வாழ்பவர் தீவினை ஏதும் செய்திடார்!

அன்பினை விட்டு, அன்பு நெறியினை விட்டுவிலகி வைக்கும் ஒவ்வோர் அடியும் பண்பாளரின் தோழமையையும் இன்பத்தினையும் விடுத்து விலகிப் போகும் பாதையில் எடுத்து வைக்கும் அடியாகும் என்பது வருந்தற்குரிய செய்தியாகும். நெஞ்சில் நிறுத்திட வேண்டிய செய்தியாகும்.

மாந்தர் நமக்கு ஏற்படும் இன்னல் சிக்கல் அனைத்தினையும் தீர்க்கத் தக்கது அன்பு என்பதைனையும், ஒவ்வோர் இடறினைத் தீர்க்கத் தக்கது அன்புதான் என்பதனையும் நம்பிக்கை கொண்டிட நம்மிலே பலருக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது என்பதை எண்ணும் போது வியப்பாயிருக்கிறது.

அன்பெனும் வாழ்வின் அறக்கட்டளை ஒன்றே
துன் பெலாம் தோற்கடிக்கும்

அன்பில் நம்பிக்கைக் கொள்வது

யோவான் 4:16, "தேவன் நம்மில் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து அன்புற்றிருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக் கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன், தேவனில் நிலைத்திருக் கிறான்; தேவனும் அவரில் நிலைத்திருக்கிறார்”.

நாம் அன்பில், நம்பிக்கைக் கொள்கிறோம். தேவன் நம்மில் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நம்புகிறோம். நாம் அன்பு நெறியில் நடந்தால், மிக உயர்ந்த தெய்விகப் பேருலகத்தில் நடக்கலாம் என்பதைனையும் நம்புகிறோம்!

அன்பின் வழி நடப்பவர் யாரும் மற்றவர்க்கு மாறாக நடக்கமாட்டார். ஆகவே நாம், இறைவனின் பிள்ளைகளாகவே நடத்தல் வேண்டும். இயேசுவில் தேவன் இருப்பது போல், நம்மில் தேவன் வந்துறையுமாறு நாம் செய்ய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/71&oldid=1515479" இலிருந்து மீள்விக்கப்பட்டது