பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

அன்பு வெள்ளம்


மற்றவர்களைப் பேணிக் காத்திடுவது என்பது, அன்பின் முதற் சட்டம்.

கடவுள் தமது மைந்தரைத் தருமாறு ஒரு தேவையை உண்டு பண்ணியதே அன்புதான்.

இயேசுவைத் தருமாறு கடவுளை ஊக்குவித்ததும் விரைவு படுத்தியதும் அன்புதான். அதே அன்புதான்் தம்மையே நமக்குத் தந்திடத் தூண்டியதும் இயக்கியதும்!

ஏதுமற்ற ஏழையருக்கும் வலிமையற்ற எளியருக்கும் ஆற்றறில்லாத பேதையருக்கும் ஆதரவு தருமாறு, நம்மை முன்னோக்கிச் செலுத்தும் ஆற்றாலாக இருப்பதும் அன்பாகும்! அன்பின் சட்டப் படியே, வலிமையற்றவர்களின் பலக்குறைவினைப் போக்கவும் ஏழை எளியருக்கு உதவிடவும் தான் வலிமையுள்ளவரைப் படைத்திருப்பதன் நோக்கம்.

எல்லா வகையான இடும்பைக்கும், ஆம் துயர் நிலைகளுக்கும் தன்னலம்தான் காரணம்.

பெரும்பாலும் நாம் சிந்தும் கண்ணின் பிறப்பிடமும் தன்னலம் தான்!

ஒருவரைக் கவலையற்றவராக - எல்லார்க்கும் இசைவாய் இருக்கத் தக்கவராக - தோழமை மனம் உள்ளம் கொண்டவராக எல்லார்க்கும் உதவுகின்ற பாங்குடையவராகச் செய்வது அன்பு.

ஒவ்வொரு பிணிக்கும் கடவுள் தந்த மாமருந்தாக உள்ளது. இயேசு பெருமானின் அன்பினைப் போன்ற அன்புதான்.

ஒருவரை அறிவின் எல்லைக்குள்ளேயே வட்டத்துக்குள்ளேயே இருக்கும் ஒருவரை அதிலிருந்து வெளியே கொணர்ந்து, தெய்விகப் பேராட்சியின் எல்லைக்குள் கொண்டு சேர்ப்பதும் அன்பேதான்.

அன்பு செய்யப்படுவதற்காக மறுபடியும் படைக்கப் பெறாது, ஒருவர் புதிய முறை அன்பினைப் பெறுதல் அவ்வளவு எளிதில்லை.

நல்லது மாறிவிட்டதை அறியாத எளிய திறமுடைய மனிதன் ஒருவனின் நெஞ்சத்தில் அன்பு இறைத் தன்மை பெற்றுவிட்ட போது, அவனைத் தனிச்சிறப்பு வாய்ந்த அரிய மனிதனாக ஆக்கிடும் கடப்பாடுடையது இப் புதிய அன்பு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/92&oldid=1219508" இலிருந்து மீள்விக்கப்பட்டது