பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

109


வதில்லை. அவதூறு பேசுவதில்லை கடந்த காலத்தில் ஏற்பட்ட அன்பற்ற செயல்களை நினைவு கூர்வதில்லை மாந்தரின் இயற்கையான அன்பு, செய்த தீங்குகளை நினைத்துப் பார்க்கும்; செய்த தீங்குகளின் வடுக்களை மற்றவர் பார்வைக்குத் தென்படவைக்கும். ‘'எதிலும் நம்பிக்கை கொள்ளுதல் வேண்டும்' பற்றார்வத்தை வெளிப்படுத்திக் காட்டும் புதிய முறை. அன்பு கூரும் ஒருவரில் நம்பிக்கை கொள்கிறோம். அன்பு வாழும் இடத்தில் ஐயம் எழுவதில்லை, அன்புடையாரிடம், ஐயப்பாடு கொள்வது கூடாது, முடியாது.

'நடக்கக் கூடியது என்னும் நம்பிக்கை கொள்க' மிகவும் தீங்கு விளைக்கும் சூழ்நிலையில் நடக்கும் எனும் ஆர்வ நம்பிக்கை என்பது, தோல்விவரக் கூடும் என்ற நிலையினையும் கடந்து, வெற்றியையும் அளித்து ஒரே சீரான மகிழ்ச்சியையும் தரவல்லது.

எதையும் தாங்கும்

புதிதான் அன்பின் வியக்கத் தக்கவைகளில் முதன்மைப் படுத்திக் காட்டும் ஒன்றாக விளங்கும் மறைமொழி எதையும் தாங்கும் என்பது. காலங் காலமாக, நல்ல விளைவுக்காக, நல்லன. செய்வதற்காக, வறுமையினையும் துன்பத்தினையும் தாங்கிக் கொண்டு அவற்றினின்று நீங்காமல் நின்று நிலைத்திருப்பது அன்பின் செயற்படு பொருளில் ஒன்றான இந்த 'எதையும் தாங்கும்' என்னும் சொற்றொடர்!

வருத்தத்தை வெளிப்படுத்தாமல் ஆண்டாண்டுக் காலமாகத் தன்மறுப்பு என்னும் பேரில் எதையும் தாங்கிக் கொண்டுவருகிறது. இறையருள் உலகில் கொண்டு சேர்க்கத்தக்கது, "எதையும் தாங்குவது” என்னும் சொல்லின் அன்பின் செயற்பாடு. இது மாந்தர் தம்முள் எதையும் தாங்கும் அன்பினர்க்குக் கடவுள் என்ன செய்வார் என்பதனை விளக்கும் மறைபொருள் விளக்கம்! எதையும் தாங்கும் அன்பு என்பதன் அடுத்த கட்டம், அன்பு யாரையும் எப்போதும் கைவிடாது என்பதாம்.

அறிவு, நிலைகுலைந்து போகும்; அறிவு சார்ந்த மற்றவை யனைத்தும் கூடக் கைவிட்டு விடும். வலிமை கொண்டு முயன்று பார்த்தால் சட்டத்தின் துணை கொள்ளல், மன வலிமை கைக்கொள்ளல், ஆக இத்தனையும் நம்மைக் கைவிட்டுவிடும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/113&oldid=1516671" இலிருந்து மீள்விக்கப்பட்டது