பக்கம்:ஆண்டாள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

ஆண்டாள்


'முல்லைப் பிராட்டியே! நீ உன் முறுவலால் எங்கட்கு அல்லல் விளைவிக்காதே! நாங்கள் உன் அடைக்கலம்; சூர்ப்பணகையை மூக்கரிந்தவர் சொல்லும் பொய்த்துவிடுமேயானால் நான் பிறந்தது கூடப் பொய்யேயாகிவிடும்.

முல்லைப் பிராட்டி! நீயுன்
முறுவல்கள் கொண்டு, எம்மை
அல்லல் விளைவியே லாழிநங்
காய்! உன்ன டைக்கலம்,
கொல்லை யரக்கியை முக்கரிந்
திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால், நானும்
பிறத்தமை பொய்யன்றே89

ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தான் என்பவன் சங்க காலத்தே வாழ்ந்த வள்ளல்களில் ஒருவன். அவன் இரப்போர்க்கு இல்லையென்னாது வழங்கியவன். அவன் இறந்த பிறகு அவன் ஊருக்குச் சென்றார் குடவாயிற் கீரத்தனர் என்னும் புலவர். முல்லை மலர்கள் பூத்துக் குலுங்கு வதைக் கண்டார். அவர் மனம் பொறுக்கவில்லை.

வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே90

என்று பாடினார். இம்முறையில் நம் ஆண்டாள்பிராட்டி யாரும் பாடும் குயில்களைப் பார்க்கிறார். "பாடுங் குயில்களே! நல்வேங்கடம் உறையும் நம் நாதனார் நமக்கொரு வாழ்வு தந்தால் நீங்கள் பாடுங்கள் கருடக்கொடியைக் கையிலேயுடைய கருணை வள்ளலாம் கண்ணனார் வந்து அருள் செய்து என்னைக் கூடிடுவரேயானால் நீங்கள் பாட்டுக்களைக் கூவி மிழற்றுங்கள். நான் அவற்றை விருப்புற்றுக் கெட்கிறேன் என்கிறார் கோதையார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/162&oldid=1462163" இலிருந்து மீள்விக்கப்பட்டது