பக்கம்:ஆண்டாள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

149


யிருக்கக் காணலாம். வேங்கை மரத்தின் பூக்கள் பல புள்ளிகளைத் தன் உடம்பிற்கொண்ட புலியின் நிறத்தையொப்பக் கீழே உதிர்ந்து கிடக்கின்றன. வேங்கை மரங்களின் இடை யிடையே நாரத்தை மரங்களும் வளர்ந்துள்ளன. இம்மரங்களிடையே குரங்குகள் பாய்ந்து தாவுதலால் நாரத்தையின் புது மலர்கள் உதிர்கின்றன. தேன்நாறும் மலையுச்சி கொண்டது வேங்கடமலை என்கிறார் அவர்.

பல்பொறிப்
புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை
நரத்த நறும்பூ நாண்மலர் உதிரக்
கலைபாய்ந்து உகளும் கல்வேல் வேங்கைத்
தேங்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரனிறர் தோரே61

பழம்பெரும்புலவர் மாமூலனார் புல்லி ஆண்ட நாடு என்பர்.

நிரைபல குழிஇய நெடுமொழிப் புல்லி
தேன்தூங்கு உயர்வரை நன்னாட்டு உம்பர்
வேங்க்டம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர்
நீடலர்62

கல்லாடனார் எனும் புலவரும்,

காம்புடை நெடுவரை வேங்கடம் 63

என்று குறிப்பிடுவர்.

சிலப்பதிகாரத்து இளங்கோவடிகள் செங்கண் நெடியோனின் நின்ற வண்ணத்தைப் பின்வருவாறு குறிப்பிடுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/151&oldid=1157771" இலிருந்து மீள்விக்கப்பட்டது