பக்கம்:ஆண்டாள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

ஆண்டாள்


வேடம் புனைந்து நிற்றல் இயற்கையாய் இலங்கும். எனவே நாயகிகளாகத் தங்களைப் பாவித்துப் பாடல்கள் புனைந்த ஆழ்வார்களைவிட, பெண்ணாகவே பூமிதனிற் பிறந்த ஆண்டாள், ஆண்டவனை, கண்ணனை கணவனாக எண்ணி உள்ளங் கலந்து உறவாடி மகிழ்ந்தது பாராட்டத்தக்க பண்பு படைத்ததன்றோ! இதனாற்றான் பிற ஆழ்வார்கள் திருமால்மாட்டுக் கொண்ட ஆரா அன்பினை 'மேட்டு மடை' என்றும், ஆண்டாள் அணியரங்கன்பாற் செலுத்தின அன்பினைப் 'பள்ளமடை’ என்றும் பெரியோர் பகர்வராயினர்.

"தேக நலத்தில் சிரத்தையுடைய சாதாரண மனிதர்களைவிட ஆத்ம சொரூபம் அறிந்த ரிஷிகள் பல மடங்கு உயர்ந்தவர்கள். ரிஷிகளைவிட ஆழ்வார்கள் பன்மடங்கு உயர்ந்தவர்கள். மற்றைய ஆழ்வார்களைவிடப் பெரியாழ்வார் எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அந்தப் பெரியாழ்வாரைவிட அவர் வளர்ப்பு மகளாம் ஆண்டாள் அநேக மடங்கு உயர்ந்தவள்" என்று வியாக்கியானச் சக்கரவர்த்தி ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை விளம்புகின்றார். எத்தனை மடங்கு ஆண்டாள், ஆழ்வார்களிலும் உயர்ந்தவள் என்பதனை அவர் குறிக்குமிடத்து.

"பர்வதப் பரமானு வோட்டை வாசிப்போருப்"

என்கிறார். அதாவது ஆண்டாள் மலை; மற்றவர் அவள் முன் தூசி' என்று சிறப்பித்துச் சொல்கிறார், இவ்வாறு மற்ற ஆழ்வார்களிலும் ஆண்டாளுக்கு ஏற்றமும் போற்றுதலும் தந்தமைக்குக் காரணம் உண்டு 'எம்பெருமானுக்கு யாரால் எப்பொழுதும் என்ன தீங்கு நேருமோ!' என அஞ்சி எப்போதும் நிலைக்கும் வண்ணம் அவனுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/86&oldid=1462081" இலிருந்து மீள்விக்கப்பட்டது