பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 125

வனம் புகு படலம்

வருவான்

பவணந்தி தமது நன்னூல்- வினையியலில் வினை யெச்சங்கள் பற்றி,

செய்து செய்பு செய்யாச் செய்பூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர் வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற ஐந்தொன் நூறுமுக் காலமும் முறைதரும்

(24)

என்று கூறியுள்ளார். வான், பான் என்பன வினையெச்ச விகுதிகளாம். வருவதற்காக என்னும் பொருளில் உள்ள 'வருவான்' என்பது வான்’ விகுதிபெற்ற வினையெச்சம், உண்பதற்காக என்னும் பொருளில் உள்ள 'உண்பான்' என்பது பான் விகுதி பெற்ற வினையெச்சம்.

ஆனால், கம்பர், 'வருதல்’ என்னும் 'தல்' விகுதி ஏற்ற தொழிற்பெயர் போல வருவான்' என்பதைக் குறிப்பிட்டுள்ளார். காட்டில் பாரத்துவாச முனிவர் இராமனை நோக்கி, நீ தவக்கோலம் பூண்டு வந்தது- வருதல் ஏன்? என்று வினவுகிறார்:

தகவில் தவவேடம் தழுவினை வருவான் ஏன்
இகல் அடு சிலை வீர இளையவனொடும் என்றான்

(24)

என்பது பாடல் பகுதி. இங்கே வருவான்' என்பதில் உள்ள வான் என்பது, வினையெச்ச விகுதியாயில்லாமல், தொழிற்பெயர் விகுதியாயுள்ளது. பேச்சு வழக்கிலும், வருவானேன்- கொடுப்பானேன்- என்ற வழக்காறு உண்டு.

சித்திர கூடப் படலம்

கட்டளை

பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என அறிவுறுத்துவதுபோல், பெண்கட்கெல்லாம் ஒரு மாதிரிப்