பக்கம்:ஆண்டாள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

ஆண்டாள்


வண்டுகள் பூக்களில் தேனை உண்டுவிட்டு அங்கேயே மதுவுண்ட மயக்கத்தில் மயங்கிப் படுத்துறங்குகின்றன என்ற குறிப்பு. அந்நாட்டின் செல்வ வளனைச் சுட்டியதாகக் கொள்ளலாம்.

கவிச்சக்கரவர்த்தி கம்பநாடரும் கோசல நாட்டின் வளனை வருணிக்கப் புகுங்கால் இத்தகு விரகினைப் பின்பற்றியிருத்தலைக் காண முடியும்.

நீரிடை உறங்கும சங்கம்
நிழலிடை உறங்கும் மேதி
போரிடை உறங்கும் அன்னம்
பொழிவிடை உறங்கும் தொகை
தூரிடை உறங்கும் இப்பி
துறையிடை உறங்கும் ஆமை
தாரிடை உறங்கும் வண்டு
தாமரை உறங்கும் செய்யாள்

- கம்பராமாயணம்; பாலகாண்டம்; நாட்டுப் படலம் : 6

வைகறைப் போதில் பறவைகள் ஒலியெழுப்பிப் பறக்கின்றன (புள்ளும் சிலம்பின காண்-6) அந்நாட்காலையில் ஆனைச் சாத்தன் பறவைகள் (பாரத்வாஜப் பறவைகள் என்பர் சிலர்) கீசுகீசு என்று ஒலியெழுப்பி நிற்கின்றன

கீசுகீசு சென்றெங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டி லையோ!
- திருப்பாவை : 7

கிழக்கு வெளுத்தது, வைகறைப்போதில் கட்டவிழ்த்து விடப் பெற்ற எருமைகள் பனிப்புல் மேய்வதன் பொருட்டு மேய்ச்சல் தரையை நாடிக் காட்டு வெளியில் பல திசைகளிலும் பரவிச் செல்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/112&oldid=1462113" இலிருந்து மீள்விக்கப்பட்டது