பக்கம்:ஆண்டாள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

ஆண்டாள்


சிறப்பித்துக் கூறப்பெறும் இந்திரன்கூடச் செல்வச் சிறப்பில் உனக்கு இணையாகமாட்டான் என்பதாம்."

சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,
அந்திர மொன்றின்றி யேறிய வன்செவியில்.
மந்திரம் கொள்வாயே போலும்வ லம்புரியே
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலாவே118

"ஏ சங்கே! ஒரே கடலில் உன்னோடு கூடவே வாழப் பிறந்தவர்களான மற்றும் பலரை இவ்வுலகம் ஒருபொருட் டாக மதிக்கவில்லை. மாறாக நீ ஒருவன் மட்டும் என்றும் நிலைத்து நிற்கும் திருக்கண்ணனாம் திருவாயின் முகத்தைப் பலகாலமாகப் பருகா நின்றாய். ஆதலின் நீயன்றோ பேறு பெற்றவன் என்றபடி

உன்னோடு டனேயொ ருகடலில் வாழ்வாரை
இன்னாரி னையாரென் றெண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி நின்றம துசூதன் வாயமுதம்
பன்னாளு முன்கின்றாய் பாஞ்சசன் னியமே 119

காதற்பூசல் காரணமாகச் சங்கை ஆட்படுத்தி ஆண்டாள் பாடியிருக்கும் பாடல்கள் இரண்டு, உயர் கருத்துகள் கொண்டு விளங்குபவை எனலாம். அவ்விரு பாடல்களையும் நோக்குவோம்.

"சங்கே! நீ உண்பது என்னவென்றால், உலகங்களை அளந்தவனான எம்பெருமானுடைய திருவாயிலுள்ள அமிர்தமாகும்; நீ படுத்துக் கொள்வது எங்கே என்றால் கடல் போன்ற நிறத்தையுடையவனான அவ் எம்பெருமானுடைய திருக்கையிலே ஆகும். இவ்வாறாக உனக்கு ஊணும் உறக்கமும் அவனிடத்திலேயே வாய்ந்திருக்கின்றன. இதனால் பெண்ணாகப் பிறவி எடுத்தோர் அனைவரும் உன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/176&oldid=1462177" இலிருந்து மீள்விக்கப்பட்டது