பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அலை தந்த ஆறுதல்


வீட்டில் நிர்மலா இருக்கும் தனியறையில் விசுவாமித்திர முனிவர் கைக்குழந்தையுடன் இருக்கும் மேனகையைப் பார்க்க மறுக்கும் காட்சி விளக்கப் படம் ஒன்றும் சாகுந்தல நாடகக் காட்சிப் படம் ஒன்றும் பாரதியார் படமும் மாட்டப்பட்டிருந்தன. இம்மூன்று படங்களும் அவள் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டவையே!

பணிவோடு, பணிப்பெண் கொண்டுவந்த காபி'யைப் பருகிக்கொண்டே பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தாள். தன்னைப்பற்றி அவதூறாக வந்திருந்த செய்திகளையெல்லாம் பார்த்துச் சிரித்துவிட்டுக் “கயமையின் கற்பனை"யென்று தனக்குள் கூறிக் கொண்டபோது டெலிபோன் மணியடித்தது. ரிசீவரை எடுத்து அமைதியாக “ஹலோ!" என்று கனிவாகப் பேசி, மேலும் “வேண்டாம் இன்ஸ்பெக்டர்! என் பெண்மையை எப்படி நான் கட்டிக் காக்கின்றேனோ, அதேபோல் பதவியையும் கம்பெனியின் மானத்தையும் காப்பேன்!” என்று சொல்லிப் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று பளிச்சென்று சொல்லிவிட்டாள். வெளியே சற்று நேரத்திற்கெல்லாம் “நிர்வாக நிர்மலா ஒழிக! ஆரவல்லி தர்பார் நடத்தும் ஆணவம் பிடித்த நிர்மலா ஒழிக! மோதாதே! மோதாதே! மோதினால் நீ தூளாவாய்” போன்ற கோஷங்கள் எழுப்பிக் கொண்டு கம்பெனியின் பணியாட்கள் வீட்டு வாசலில் நின்றனர். எலிப்பகை நாகம் உயிர்ப்பக்கெடும்’ என்னும் திருவள்ளுவர் வாக்கு அவளுக்கு அத்துப்படி. படித்தபோது பல்கலைக்கழகப் பேச்சாளர் ஆயிற்றே! தன் வீட்டுச் சுவருக்கு மேல் நின்றுகொண்டு பேசத் தொடங்கினாள். அழுகிய முட்டையொன்று மேலே விழுந்தது. சில கற்கள் வேறு எறியப்பட்டன. தான் சிலம் பாட்டத்தில் பெற்ற பயிற்சியால் அதனையெல்லாம்