பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 37 தகட்டைச் சுரண்டியும், ஆஸிட் ஊறலில் நனையப் போடுவது போலவும் பதினொரு மணி வரை நடிக்க வேண்டியிருந்தது. அதற்குள்ளேயே இரண்டு தரம் சி.ஐ.டி. வந்து விட்டான்.

'என்ன, கில்ட் கடைக்காரரே, இன்னிக்குக் கீதைப் பிரசங்கம் கிடையாதா? - என்றும் கூட ஒரு தடவை அவரைக் கேட்டிருந்தான் சி.ஐ.டி. அதையும் சாவி கொண்டு போனவரிடம் சொல்லி ராஜாராமனை எச்சரித்து வைக்கும்படி பத்தர் கூறியிருந்தார். .

பிட்டுத் தோப்பு நந்தவனத்தில் வந்தேமாதர முழக்கத்துடன் நண்பர்கள் சந்தித்தனர்.

'நம்மில் சிலராவது திருச்சிக்குப் போய், வேதாரணியத்துக்கு அங்கிருந்து சேலம் வக்கீல் எலி. ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் புறப்பட்ட உப்பு சத்தியாக்கிரக கோஷ்டியோடு கலந்து கொண்டிருக்க வேண்டும். நானே அப்படிக் கலந்து கொண்டு கைதாகியிருக்கலாம். அதற்கு நான் ஆசைப்பட்டேன்; முடியவில்லை. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. நாம் ஏதாவது செய்யவேண்டும். காலையில் ஜோசப் சாரை பார்க்கப் போயிருந்தேன். அவரும் இல்லை. காந்தியும் தலைவர்களும் கைதான செய்திகளைப் படிக்கப் படிக்க என் நெஞ்சு குமுறுகிறது. நமது மரியாதைக்குரிய தேசத் தலைவர்கள் சிறையில் வாடும்போது நாம் இப்படிச் சும்மா இருக்கலாகாது. - என்று ராஜாராமனும் அதையடுத்து முத்திருளப்பனும் குருசாமியும் பேசினார்கள்.

செல்லூரில் கள்ளுக்கடை மறியலும், கீழ்ச் சித்திரை வீதியில் அம்மன் சந்நிதி முகப்பில் துணிக்கடை மறியலும் செய்யலாமென்று முடிவாயிற்று. துணிக்கடை மறியலுக்கு ராஜாராமன் தலைமையேற்பதாகக் கூறினான். மற்றொன் றிற்குக் குருசாமி, முத்திருளப்பன், இருவருமே தயாரா யிருந்தனர். சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து