பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

11

வகையாகத் தன் பொழிவுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். கலை முதல்வன்! வரவேற்பாளர் பேசிய பேச்சு ‘குறளைப் பேச்சு... நான் பேசப் போவது குறள் பேச்சு” என்றார். அரங்கில் கைதட்டல் ஒலி வெளியில் பெய்யும் மழை யொலியையும் விஞ்சியது. “வானமிழ்தத்தை விடச் சொல்லமிழ்தம் சுவைக்க வந்த சுறுசுறுப்பிகளே!’ என்று அவையடக்கம் கூறியதில் உள்ள நகைச்சுவை அமுதத்தைப் பருகியவர்கள் பேச்சினைத் தொடர்ந்து கேட்க

ஆர்வலராய் இருந்தனர்.

“குறள் அளவால் சிறியது; ஆயின் பொருள் தருவதில் பெரியது. வடிவால் வாமனம்; பயனால் திருவிக்கிரமம்’ என மின் வெட்டினைப் போல் பளிச்பளிச்சென்று ஒளிச் சொற்களை வீசியதும் மக்கள் வாயை மூடிக் காதுகளைத் திறந்தனர். அந்தக் குறள்போல் சுருக்கமாகப் பேசி விளக்கமான வாழ்க்கைத் தத்துவம் தந்த பெரியோர்களைப் பற்றித் தான் பேசலாம் என்று நினைத்துள்ளேன்” என்றார். “பிறவிக்கடலை நீந்துகிறோமோ இல்லையோ கவலைக் கடலை நீந்தத் தெரிய வேண்டும்;மனச்சாலையைக் கடக்க வரலாறு கற்பித்த விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஒரு மனிதர் கூறினார். அவர் உங்கள் மனதில் முன்னமேயே பதிந்த பெரியவர்களில் ஒருவர் இல்லை. “குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுக் கொலை புரிந்ததாகச் சொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டவர் சொன்ன இறுதி வார்த்தைதான் அது குற்றவாளிகளின் வாழ்க்கை நமக்குத் தேவை இல்லை.மனமடங்கக் கல்லாமல் அவர்களைத் தீங்கு செய்யத் தூண்டிய மனத்தை நாம் அடக்கக் கற்றால், மரணம் இல்லாப் பெரு வாழ்வு, அதாவது புகழுடன் வாழலாம். அவர்கள் செய்த