பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 ரசவாதம் பொருட்களையும் அதிர்ந்து பார்த்தார். மோசமான மனுஷன். கள்ள நோட்டு அடிக்கப் பார்த்தவன். பக்கத்து வயல் வரப்பை வெட்டுறவன். "பணம் படைச்ச நீ, ஆசைப்படறது தப்பு. ஒன் மகள் கல்யாணம் நடக்கும். அவள் தீர்க்காயுசா குழந்தை குட்டிகளோட வாழ்வாள். நான் சொல்றதை நம்பு!” "நம்புறேன் அய்யா நம்புறேன். அதே மாதிரி, நான் சொல்றதையும் சாமி நம்பணும். என்னோட பத்துப் பவுன் நகை போயிட்டுது. ஐம்பது பவுன் போடுறதா பொறுப்புப் பேசியிருக்கேன். பத்துப் பவுன் காணல. மயில்சாமி என்னோட நகையைத் திருடலன்னு நான் நம்புறதுக்காவது நீங்க பத்துப் பவுனையாவது தங்கமாத் தரணும். இல்லேன்னா இவனைப் போலீசில பிடிச்சுக் கொடுப்பேன். அங்கே இவனோட திருட்டு அம்பலமாகும். இல்லேன்னா ஒங்க குட்டு அம்பலமாகும். கவலைப்படாதீங்க சாமி! நான் யாரு கிட்டயும் சொல்ல மாட்டேன். சரி. வேலய ஆரம்பிப்போமா?" சம்பூர்ணம், தெளிந்து விட்டார். ஆசாமியிடம் இருந்து தப்ப முடியாது. எப்படியாவது சமாளிக்க வேண்டும்! "சரி. இப்படிவா. சொல்லித்தரேன்!" "அப்படிச் சொன்னா எப்படிச்சாமி? நீங்க தப்புத் தப்பாச் சொல்ல மாட்டீங்க என்கிறது என்ன நிச்சயம்? நீங்க சத்தியவான். சத்தியம் மீறா தவரு வாங்க முருகன் கோவிலுக்குப் போவோம். நான் தேங்காய் பழம் கொண்டு வந்திருக்கேன். தாம்பாளத் தட்டுல ஒரு கற்பூரத்தைக் கொளுத்தறேன். நீங்க முருகா! இவருக்கு அதாவது இந்த அருணாசலத்துச் சத்தியமாய்த் தெரிஞ்சதைத் தான் சொல்லிக் கொடுக்கேன். பொய் சொல்லலேன்னு எதுக்கும் ஒரு பேச்சு பேசிடுங்க!" சம்பூர்ணம், சத்தியம் செய்து விட்டார். அந்தக் கையோடயே அருணாசலத்துக்குச் சொல்ல வேண்டியதை