பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 35 மாலையில், அலுவலகம் முடிந்ததும், வசந்தி, அவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாள். "நீங்க சொல்றதுமாதிரி அந்தக் கிழம் தன்னோட மகள வைக்கிறதுக்காக என்னைத் திறமையில்லாதவள்னு நிரூபிக்கப் பார்க்குமோ?" என்றாள். "வசந்தி. இந்த மாதிரி சமாச்சாரங்களை, இந்த மாதிரி இடத்தில நின்று பேசக் கூடாது. வா, அந்த ஒட்டலுக்குப் போவோம். அங்க போய்ப் பேசலாம்." வசந்தி முதலில் தயங்கினாள். பிறகு, அவன் செய்த உதவிகளுக்கு நன்றி காட்டுவதுபோல், நடந்தாள். பேமிலி ரூமிற்குள் அவன் நுழைந்தான். அவள் கால்கள் தயங்கின. 'இங்க வந்து கலாட்டா பண்ணாதே. ரெண்டு பேரையும் தப்பா நினைப்பாங்க, என்னைப் பார்த்தால் தப்பா நடக்கிறவன் மாதிரி தெரியுதா?’ என்றான் சற்றுக் கோபமாக, வசந்தி, அந்த அறைக்குள் போனாள். அவன் எதிர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். "நான் உன்னிடம் நட்பைத்தான் எதிர்பார்க்கிறேன். சத்தியமாய் வேற எதையும் எதிர்பார்க்கல” என்று சொன்னது, அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அவர்கள் இருவரும் அடிக்கடி ஒட்டல்களுக்குப் போய் வருவது வாடிக்கையாகிவிட்டது. அவன், அவளுக்கு எதிர்த்தாற்போல் உள்ள நாற்காலியில்தான் உட்காருவான். அன்று சம்பள தினம். அவளுக்குச் சம்பளம் கிடைக்கவில்லை. இருவரும், வழக்கமான ஒட்டலுக்குப் போனார்கள். பிரகாஷ், அவளுக்கு ஆறுதல் சொன்னான். "டோண்ட் ஒர்ரி வசந்தி, ஹெட் ஆபீஸ்ல இருந்து கன்பர்மேஷன் வந்திடும். வெறும் பார்மாவிட்டிதான். மானேஜர் உனக்குக் கொடுத்த வேலையை, அவர்கள் உறுதி செய்து ஆர்டர் போடவேண்டியது அலுவலக விதி. பைலை