பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 21 வாழ்க்கை வரலாறு எழுதும் விருப்பத்தை நான் பிரஸ்தாபித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் 'நாராயணராவ்! நான் உயில் எழுதாவிட்டாலும் என் டைரிகளின் உரிமை இவரைச் சேர வேண்டியது தான்; இதை இப்போதே உன்னிடம் சொல்லி வைக்கிறேன், என்று பக்கத்திலிருந்த தமது காரியதரிசி யிடம் சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார் அவர்.

‘ராஜு இப்போது பத்திரிகைக்காரராக இருந்தாலும் வக்கீலுக்குப் படித்தவர். டைரிகளை அவரிடம் கொடுக்கா விட்டால் உம்மேல் கேஸ் கூடப் போடுவார், ஜாக்கிரதை' என்று கூட ஒரு முறை நாராயணராவைக் கேலி செய்திருக்கிறார் பெரியவர். ~

இரண்டு மூன்று நாட்களில் நாராயணராவ் பெரியவருடைய டைரிகள் எல்லாவற்றையும், அவர் மாரடைப்பால் இறந்து போவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன் எழுதியது உட்பட, என்னிடம் ஒப்படைத்து விட்டார். நாராயணராவுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லை. சென்னை திரும்பியதும் காரியாலயத்துக்கு ஒரு மாதம் லீவு போட்டுவிட்டுப் பெரியவர் காந்திராமனின் டைரிகளில் மூழ்கினேன். சத்யாக்கிரக வாழ்வில் காந்தியுகம் அளிக்கமுடிந்த ஒரு காவியமாகவே அந்த வாழ்க்கை வரலாறு அமையும்போல் தெரிகிறது. சுதந்திரத்துக்குத் தியாகம் செய்தவர்களின் காலமும் சுதந்திரத்தை அநுபவிக்கிறவர்களின் காலமும் இந்த வரலாற்றில் சந்திக்கின்றன. பெரியவருடைய வாழ்க்கையில் உலகறியாத பகுதிகளும், அவரைத் தியாகியாக்கிய வேறொரு தியாகியின் கதையும் இதன் மூலம் வெளியாகிறது. அவரே சொல்லியதைப் போல் இந்த வரலாறு ஒரு நாவலைவிடச் சுவாரஸ்யமாயிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டு வாசித்தாலும் சரிதான். ஒரு வரலாற்றைப் போல எழுத முனைவதைவிட ஒரு கதையைப்போலவே இதை நான் எழுதவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. பெரியவர் தம் வாழ்நாளில் யாரையும் வெறுத்ததில்லை; யாருக்கும் கெடுதல்