பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஆத்மாவின் ராகங்கள்

  • * * * * *

ராஜாராமன் பதில் சொல்லவில்லை. அவன் வாசகசாலைக்குப் போய்ச் சேர்ந்த போது கில்ட் கடை பத்தர் புதிதாக ஒரு செய்தியைச் சொன்னார்.

காலையிலேர்ந்து சி.ஐ.டி. ஒருத்தன் வட்டம் போடறான். எங்கிட்டக் கூட வந்து, மேலே என்ன லைப்ரரி?’ன்னான். 'திலகர் லைப்ரரி; சிலசமயம் ராத்திரிலே கீதைப் பிரசங்கம் நடக்கும் 'னேன். அப்புறம் தான் அவன் போனான். எதுக்குச் சொல்றேன்னா, போலீஸ் கண்லே லைப்ரரியும் இருக்கு; தெரிஞ்சுக்கங்க தம்பீ' என்றார் பத்தர். சமயத்தில் அவர் அதைத் தன்னிடம் தெரிவித்ததற்காக ராஜாராமன் அவருக்கு நன்றி தெரிவித்தான்.

(3)

அன்றிரவு கூட்டம் வாசக சாலையில் நடைபெற வில்லை. வைகைக் கரையில் பிட்டுத் தோப்பு மண்டபத் தருகே ஒரு நந்தவனத்தில் நடந்தது. வாசகசாலையில் கூட்டம் நடக்கும் என்று வந்தவர்களுக்குத் தகவல் சொல்லிப் பிட்டுத் தோப்புக்கு மாற்றி அனுப்புவதற்காகவே பத்தர் அன்று பிரமாத வேலையிருப்பது போல் கில்ட் கடையை ரொம்ப நேரம் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தார். கடைசி நபரையும் பிட்டுத் தோப்புக்கு அனுப்பியதோடு அந்தக் கடைசி நபரிடமே வாசகசாலைச் சாவியையும் ராஜாராமனுக்குக் கொடுத்தனுப்பி விட்டார் பத்தர். ஒரு வேளை ராஜாராமனும், நண்பர்களும் பிட்டுத் தோப்பில் கூட்டம் முடிந்து வெகு நேரமாகித் திரும்பும் போது வாசக சாலையில் வந்து படுக்க நேர்ந்தாலும் அதற்கு வசதியாகச் சாவி இருக்கட்டும் என்ற முன்யோசனையோடு தான் சாவியைக் கொடுத்தனுப்பியிருந்தார் அவர். அன்று வழக்கத்துக்கு மாறாகக் கில்ட் கடையைப் பூட்டும் போது பதினொரு மணிக்கு மேலாகிவிட்டது. எதையாவது