பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 23 கொண்டிருந்தது. மதிலை ஒட்டி இருந்த நந்தவனத்தில் தென்னை மரத்தின் பச்சை ஓலைகளைக் காற்று சுதந்திரமான சுகத்துடன் அசைத்துக் கொண்டிருந்தது. அன்று 7-5-30ல் வாசகசாலையில் ஒரு மிக முக்கியமான கூட்டம்.

அதனால் மதிலுக்கு எதிர் வரிசை மாடியில் திலகர் தேசிய வாசகசாலையின் அறையில் மட்டும் விளக்கு இன்னும் அணையவில்லை. மாடி முகப்பில் யாரோ சிலர் நின்று எவருடைய வரவையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது. மேலச்சித்திரை வீதியும், வடக்குச் சித்திரை வீதியும் சந்திக்கிற மூலையில் இருந்த ஒட்டல் வாசலில் வேலை செய்கிறவர்கள், கோடைக்காக வெளியே கட்டில்களை எடுத்துப் போட்டுக் கொண்டு, தூக்கம் வராததால் ஏதோ ஊர்க் கதைகள் பேசிக் கொண்டிருக் கிறார்கள். வாசக சாலையில் கூடியிருந்தவர்கள் எதிர் பார்த்திருந்த ராஜாராமன் அன்னக்குழி மண்டபத்துக்குப் பின்னாலிருந்து புறப்பட்டு வாசக சாலைக்கு வந்து சேரும் போது மணி பதினொன்றரை ஆகிவிட்டது. கையோடு முதல் நாள் சென்னையில் பதிப்பாகி ம்றுநாள் மதுரைக்குக் கிடைத்திருந்த 'சுதேசமித்திரன் தினசரியையும் கொண்டு வந்திருந்தான் ராஜாராமன். மாடிப்படி இருண்டிருந்தது. ஆறடி உயரத்திற்கு மேலிருந்த ராஜாராமன் வெளேறென்று தும்பைப் பூப்போல் வெளுத்த தூய உடையின் கம்பீரத்தோடு படியேறி வந்தது மின்னல் புறப்பட்டு மேலேறி வருவது போலிருந்தது. ராஜாராமன் மேலே படியேறி வருவதைப் பார்த்ததும், மாடி முகப்பில் கூடியிருந்தவர்கள் உள்ளே திரும்பினர். வாசக சாலையையும் மாடிப்படியையும் இணைக்கும் கதவு ராஜாராமன் உள்ளே வந்ததுமே தாழிடப்பட்டது. கீழே விரிக்கப்பட்டிருந்த பாயில் நண்பர்கள் சூழ அமர்ந்தான் ராஜாராமன். விளக்கு வெளிச்சத்தில் அவன் தோற்றத்தை இப்போது மிக நன்றாகப் பார்க்க முடிகிறது. உயரத்திற்குத் தகுந்த அழகும் வசீகரமும் அவன் தோற்றத்தில் பொருந்தியிருக்கின்றன. ரோஜாப் பூ நீளமாகப் பூத்துச் சிவந்தது போல் நளினமாயிருந்த அவனுடைய அழகிய கைவிரல்களால் 'சுதேசமித்திரன் தினசரி