பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஆத்மாவின் ராகங்கள் போறதுன்னு உங்க காந்தி இதையெல்லாம் கட்டிண்டு அழறார்? சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை இதனாலெல்லாம் அசைச்சுப்பிட முடியும்னா நினைக்கிறே? எல்லாம் சின்னக் குழந்தைகள் விளையாடற மாதிரீன்னா

இருக்கு...'

'சின்னக் குழந்தைகள் விளையாடித்தான் பெரிய வாளாகனும், ரொம்ப நாளா உமக்கு ஜஸ்டிஸ் கட்சி வக்கீல் கிட்டக் குமாஸ்தாவா இருந்து இருந்து, அந்தப் புத்தியே வந்திருக்கு ஒய்! இந்த தேசத்திலே இன்னிக்கு முக்கால்வாசி ஜனங்களுக்கு சுதேசி உணர்ச்சின்னா என்னன்னே தெரியலே. அது ஏதோ தப்பான காரியம், அல்லது ராஜத்துவேஷமான காரியம்னு பொய்யான பிரமை பிடிச்சு ஆட்டிக்கிண்டிருக்கு. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் போக்க முடியும். அதைப் போக்கறதுக்குக் காந்தி செய்யற எல்லாமே சரியான காரியம் தான். சுதேசி உணர்ச்சிங்கறது என்னன்னு பால பாடமே சொல்லிக் கொடுக்கறாப்பிலே, உம்மைப் போலக் கோடிக்கணக்கான ஜனங்கள் இங்கே இருக்கு ஒய்! பிரிட்டீஷ்காரன் யாரோ நீர் யாரோ, ஆனா அவனை உம்ம தாத்தா மாதிரி நினைச்சுப் பேசlர் நீர். இந்தப் பிரமையை எப்படியாவது முதல்லே போக்கியாகணும்...'

'என்னமோ போ! உங்கம்மா ரொம்ப மனக் கஷடப் படறா. நீ படிப்பைக் கெடுத்திண்டு வீணுக்கு அலையறே9'

'ஒய், எங்கம்மாதான் படிக்காதவ! ஒரு பாசத்திலே அப்பிடி நெனைக்கறா - நீரெல்லாம் படிச்சவர்; நீரே இங்கே அப்படி நெனைக்கறபோது என்ன செய்யறது?...' ‘. . . .

வக்கீல் குமாஸ்தா மேலே ஒன்றும் பேச முடியவில்லை. ஈரக்கையை மேல் துண்டினால் துடைத்துக் கொண்டே உள்ளே போனான் ராஜாராமன். சாப்பாட்டில் மனம் செல்லவில்லை. சாப்பிட்டோம் என்று பேர் செய்யத்தான் முடிந்தது. வெள்ளைக்காரன் சிறைக்குள் கொண்டு வைப்பதற்கு முன் அதற்குத் தயங்கித் தானே சிறையில்