பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 35 உருப்படப்போறதோ? - என்று அவன் வாய் முணு முணுத்தது. 'பயமென்னும் பேய் தன்னை விரட்டி யடித்தோம் - பொய்மைப் பாம்பைப் பிளந்து உயிரைக் குடித்தோம்' - என்று மனப்பாடம் செய்திருந்த பாரதியார் பாட்டு ஞாபகம் வந்தது. அந்நிய அரசாங்கத்துக்குப் பயப்படுகிற வயதானவர்களையும், வயதானவர்களுக்குப் பயப்படுகிற இளைஞர்களையும் வைத்துக் கொண்டு, இங்கு எதையுமே சாதிக்க முடியாது. மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதையும், நூலோர்கள் செக்கடியில் நோவதையும் இனியும் பொறுப்பதற்கில்லை என்று அவனுடைய இளம் ரத்தம் சூடேறிக் கொதித்தது. இதில் தனக்கு உதவக்கூடியவர்கள் என்று நம்பிக்கையளித்த பலரைப் போய்ச் சந்தித்து, வாசக சாலைக்கு அன்றிரவு வருமாறு வேண்டிக் கொண்டான். ராஜாராமன் நிறைய அலையவேண்டியிருந்தது; நிறையப் பேச வேண்டியிருந்தது. தேசவிடுதலையிலும், காந்தியிடமும், அதுதாபமும் நம்பிக்கையுமுள்ளவர்கள் கூடப் பயப்பட்டார்கள்.

'எல்லாம் சரி. இதுக்காக நீ காலேஜ் படிப்பை விட்டிருக்கப் படாதுப்பா-என்று அவனைக் கடிந்து கொள்ளத் தலைப்பட்டனர் சிலர். எதைக் கேட்டும் அவன் கலங்கிவிடவில்லை. வீடு திரும்பும் போது பகல் இரண்டு மணி ஆகிவிட்டது. சாப்பாட்டை முடித்துக் கொண்டு வெளியே மறுபடி புறப்பட்டபோதும், 'மேலுருக்குப் போய்க் குத்தகைக்காரனைப் பார்த்துட்டு வரணும்னேனே?" என்று மீண்டும் காலையில் சொன்னதையே திருப்பிச் சொன்னாள் தாய். -

'நாளைக்குப் போறேன், அம்மா. இன்னிக்கு ராத்திரியும் வாசகசாலையில் கூட்டம் இருக்கு. எல்லோரையும் வரச் சொல்லியிருக்கேன்."

'தினம் ராத்திரி ராத்திரி என்ன கூட்டம் வேண்டிக் கெடக்கு ?"