பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

oszfc5 Goaraf அன்று இரவு, எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. காரணம், என்னவென்றும் சொல்லத் தெரியவில்லை இப்போது தூக்கத்திற்கே என்னைப் பிடிக்கிறது. ஆனால் எனக்குத்தான் இந்தத் தூக்கத்தைக் கண்டாலே பிடிக்கவில்லை. தூங்கக்கூடாது என்று ஒரு எண்ணம் தூக்கத்தின் மீது ஒரு எரிச்சல், என்ன வந்தது எனக்கு? இந்தப் பூமியில் விழுந்த அந்த நாளிலிருந்து, இதோ இப்போது எழுந்து நிற்கும் இந்த நாள் வரை நானும் தூக்கமும் கடும் சினேகிதர்கள். கடும் சிநேகிதம் கண்ணைக் கெடுக்கும் என்பது போல் ஆகிவிட்டதா? தூங்குகிற ஒரு காரியத்தை மட்டும்தான் நான் உருப்படியாய் செய்ததாய் அந்தக் காலத்தில் அம்மாவும், இந்தக் காலத்தில் அவளும் சொன்னதுண்டு, சொல்வதுண்டு; அடர்ந்த முடியும் படர்ந்த முகமும், சர்க்கரை வள்ளிக்கிழங்கின் நிறமும் கொண்ட என் அம்மா, காதுகளில் பாம்படங்கள் ஊஞ்சலாட பள்ளிக்கூட மணியடிக்கிற சப்தம் கேட்டு என்னை உசுப்புவாள். பிறகு செம்பில் தண்ணிர் கொண்டு வந்து முகத்தில் ஊற்றுவாள். அப்படியும் நான் அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு, தன் முந்தானையால் என் முகத்தைத் துடைத்து விடுவாள். அம்மா சொல்லித்தான் பொழுது விடிவது எனக்குத் தெரியும். ஆனாலும், சின்ன வயசிலேயே நிரந்தரத் தூக்கமான என் அம்மாவை நினைக்கும்போதெல்லாம்,