பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

45

கம் பண்ணியிருக்கான். கழுத்திலே, கையிலே, காதுலே பளபளன்னு போட்டுண்டு சாஷாத் அந்த அம்பாளாட்டமா ஜொலிக்கிறே...”

“ஐயோ! என்னைப்போய் அவளோட ஒப்பிடாதீங்கோ... நான் பாவம் பண்ணிய மனுஷ ஜன்மம். வெளியிலே பவித்ரமர் இருக்கிறாப்போல இருந்துண்டு மனசால கெட்டுண்டு இருக்கேன்”

“அப்போ அவனைப் புடிக்கிலையா உனக்கு. உனக்கு ஏத்தவன் இல்லைதான். உனக்குப் புடிச்சவனா என்னே மாதிரி இருந்தார் இப்படி தங்கமா இழைச்சுக்க முடியுமா? நல்ல புடவையா வேணா வாங்கித்தருவேன். நகை நட்டு, ஏ அப்பா! இந்த விலையிலே என்னாலே வாங்கிப்போட முடியுமா?”

நர்மதாவின் கண்கள் கலங்கியிருந்தது.

“நகையும் நட்டும்” என்று முணு முணுத்தாள். அதற்கு மேல் குருக்கள் வரும் சத்தம் கேட்டது. இருவரும் வெளியே வந்து விட்டார்கள்.

கோவில் வாசல்படியில் பூக்காரி இரண்டு முழத்தை வைத்துக்கொண்டு, “வாங்கிக்குடேன் சாமி” என்றாள்.

வாங்கினான். அவளும் பேசாமல் வாங்கி வைத்துக் கொண்டாள்.

இருவரும் வெவ்வேறாகப் பிரிந்து நடந்தார்கள்.