பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

7

மரங்கள் சாய்ந்து நின்றன . மாவிலைத் தோரணங்கள் அசைந்தன.

“பெண்டாட்டி கையைப் புடிச்சுக்கோ பட்டப்பா...... கிழக்கே பார்த்து நில்லுங்கோ” என்றபடி பூரணி வந்தாள். அவள் மெட்டி குநிங்கியது, தாளமிட்டது. ஆரத்தியைச் சுழற்றிக்கொண்டே நர்மதாவை நிமிர்ந்து பார்த்தாள். சொக்கிப்போனாற்போல ஒரு பார்வை. சந்திரகலை மாதிரி வளைந்த நெற்றி. அதில் படிந்த சுருட்டைக் கூந்தல். எடுப்பான மூக்கு. வைரம் மின்னியது. மூக்குத்தி சில பேருக்கு உடம்போடு பிறந்த மாதிரி ரொம்பப் பொருந்திப்போய் விடுகிறது.

கங்கம்மா தம்பியையிம், தம்பி மனைவியையும் ஆசைடதீரப் பார்த்தாள். கண்களில் கண்ணிர் அரும்பு கட்டிவிட்டது.

“வலது காலை எடுத்து வைச்சு வாம்மா-”

நர்மதா உள்ளே வந்தாள். கூடத்தில் பளபளவென்று சங்கிலிகள் கோத்த ஊஞ்சல் லேசாக ஆடிக்கொண்டிருந்தது. சுவர் நிறைய தஞ்சாவூர் படங்கள். எதிர் பக்கத்து அறையில் இரண்டு கட்டில்கள் போடப்பட்டிருந்தன. புது மெத்தைகள் சுருட்டி வைத்திருந்தார்கள். -

'உள்ளே வாம்மா...மொதல்லெ காப்பி சாப்பிடு...அப்புறமா வீட்டைச்சுத்தி பாக்கலாம்' என்று பரிவோடு கங்கம்மா நர்மதாவை உபசரித்தாள்.

நுரை ததும்பும் காப்பி கொண்டுவந்து வைத்தாள். பட்டப்பா இவளைக்கவனிக்காமல் என்னவோ பேசிக்கொண்டு வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தான்.

சமையலறையிலிருந்து கம்மென்று பாயசம் மணத்தது. கசகசா தேங்காய் அரைத்த பாயசம். கூடவே நெய்யும் விட்டிருப்பார்கள் போலிருக்கிறது.

நர்மதா குளிக்கப் புறப்பட்டாள். ஊர் நாட்டுப்புறம் மாதிரி இருந்தாலும், கங்கம்மா தன் வீட்டில் எல்லா வசதிகளும் செய்திருந்தாள். குளியலறை வசதியாக இருந்தது. அங்கே, அம்மா ஊரில் விடிய நாலு நாழி முன்பே எழுந்திருந்து யாரானும் வராளா வராளான்னு பார்த்துண்டு அவசர அவசரமா குளிச்சுட்டு வந்து பழக்கம். ஆசை தீர ஜலமா கொட்டிண்டு குளிக்கணும்னு அங்கே தொட்டியில் தளும்பிய