பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 திடப்பட்டவள் இப்படி நெருக்கமாகவும், நேசமாகவும் இருந்த அவர்கள் இல்லறம், பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, படிப்படியாக நேசத்தை வைத்துக்கொண்டு, அதன் நெருக்கத்தை அழித்துக்கொண்டிருந்தது. இருவருக்கும் இடையே விளையாடிக் களிப்பதற்கு பிள்ளை இல்லை. இவ்வளவுக்கும் அருளய்யா அவளிடம் வாய்விட்டு 'ஹலிம், உன்னால எனக்கு ஒரு குழந்தை தர முடியவில்லையே' என்று நேராகக் கேட்டதில்லை. போன வருஷம். கல்யாணமானவனுக்கு இந்த வருஷம் பிள்ளை, என்று சுற்றுப்புறக்காரனைச் சுட்டிக் காட்டுவார். பின்னர் ஒரு நாள், "நம்ம ஜோஸப் டில்லியில் இருந்து வந்திருக்கான். வழில பாத்தேன். அவனுக்கும் பேர் சொல்ல பிள்ளையில்ல. என்னைப்போல ஆண்மை இல்லாதவன் போலிருக்கு," என்று அவர் சொன்னதை, அவளால் பொறுக்க முடியவில்லை. அவள் தூரத்து உறவில், ஏழ்மையில் வாடிய இளம்பெண்ணைத் திருச்சபைக்குத் தெரியாமல் மூன்று வருடத்திற்கு முன்பு, தனது ஐம்பது வயது கணவனுக்கு மணமுடித்து வைத்தாள். அருளய்யாவும், அவளுக்காகப் போனால் போகிறது என்று திருமணம் செய்து கொள்வது போல், அவளை மட்டுமல்ல, தன்னையும் ஏமாற்றிக் கொண்டார். ஆரம்ப காலத்தில், கணவனை இன்னொருத்தி பகிர்ந்து கொள்கிறாள் என்பதில் எலிஸபெத்திற்குக் கொஞ்சம் பொறாமைதான். ஆனால் அவள் வந்த வேகத்திலேயே ஒர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததும் எலிஸபெத் அந்தக் குழந்தையை, தான் வைத்துக்கொண்டு, குழந்தைக்காரி கணவனுடன் குதுகலாமாய் இருக்க வழி செய்தாள். ஆனால், வழி செய்தவளுக்கு விழி பிதுங்கத் துவங்கியது. சக்களத்தி இரண்டாவது தாரம் மட்டுமல்ல. தரமும் அப்படித்தான் என்பது போல் அவளுக்குப் பட்டது. அவள் பட்டாடைகளை வாங்குவதும், அக்கம் பக்கத்திலே