பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 பனிப்போர் பின்னலை பிரிக்கும் முயற்சியாக சிந்தைனையைத் திசை திருப்ப முயற்சித்தேன். எனது அலுவலக தனியறைக்குள் மானசீகமாக நுழைந்தேன். அன்று பகலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. நான் என் அறைக்குள் நுழையும்போது, வெளியே உள்ள ஊழியர்கள் எனது அறையை உற்றுப் பார்த்து விட்டு என்னைப் பார்க்கிறார்கள். லேசாய் சிரிக்கிறார்கள் நான் உள்ளே நுழைந்தால், நான் மகளாய் நேசிக்கும் என் அந்தரங்க உதவியாளிப் பெண் அந்தப் பித்துக்குளி இன்னும் வரலை. அது இருந்தா இப்படிப் பேச முடியுமா என்று டெலி போனில் பேசிக் கொண்டிருக்கிறாள். என்னைப் பார்த்ததும் டெலிபோனை தொப்பென்று மேஜையில் போட்டுவிட்டு, பேச்சற்று மூச்சற்று வெளியேறுகிறாள். எனக்கு லேசாய் கோபம் வருகிறது. ஆனாலும் சிரித்துக் கொள்கிறேன். அவளின் அநாகரீகத்திற்கு, நான் அநாகரீகத்திலேயே பதில் அளிக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கிறேன். அதோடு, சின்ன வயதில் அம்மா என்னை தவிக்கவிட்டுச் சென்ற நாளிலிருந்து இத்தகைய அவமானங்கள் எனக்கு அத்துபடி. ஆனாலும் மனக ஏனோ கேட்கவில்லை. இந்தச் சமயத்தில் எனது இன்னொரு உதவியாளர் மாரிமுத்து உள்ளே வந்தான். எடுத்த எடுப்பிலேயே என்னைச் செல்லமாக இப்படி திட்டினான். "என்ன ஸ்ார் அநியாயம்? உங்க காதுபடவே இந்த பத்தினித்தங்கம் இப்படி பேசிட்டுப் போவுது. நீங்க, அவளை இன்னும் விட்டு வச்சிருக்கீங்களே..... உங்க இடத்தில் நான் மட்டும் இருந்தால், இந்நேரம் அவள் சீட்டைக் கிழிச்சிருப்பேன். அதைக் கிழிக்கிறதுக்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கு. ஒரு வார்த்தை சொல்லுங்க. நான் பார்த்துக்கறேன். ஏன் சார் இப்படி சிரிக்கிறீங்க? உங்களுக்கு நீங்களே இப்படி கண்டிப்பா இருக்கிற மாதிரி, பிறத்தியார் கிட்டேயும் கண்டிப்பா இருக்காவிட்டால், அந்தக் கண்டிப்பு ஒரு நடிப்பாயிடும்.