பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 17 கர்த்தர், இவர்களை சகல ஆசீர்வாதத்தினாலும், கிருபையினாலும் நிரப் பக்கடவர், ஆமென்' என்று மாங்கல்யம் தரித்து, மணமுடிந்த இருவரையும் வாழ்த்தி, பாதிரியார் விவாகத்தைப் பூர்த்தி செய்து வைத்தார். உடனே வேத சங்கீதம் துவங்கியது. எலிஸபெத் மங்கல நன்னாளில், அமங்கலக் கண்ணிரைச் சிந்தக்கூடாது என்று உறுதியோடு வெளியே வந்தாள். தம்பி மட்டும் அங்கே நின்றார். எலிஸபெத்தைப் பார்த்ததும், அவர் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு பேசினார். "நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் மனசு இளகல. நீ இளையோடிய பிள்ள உருப்படக் கூடாதுன்னு நினைக்கிற வளாம். ஒன் வாடையை வே ண் டா மா ம் . இ. ப் ப டி ச் .ெ சா ன் ன வ் ா யி ல குத்தலாமோன்னு நினைச்சேன்." எலிஸபெத் காதுகளைப் பொத்திக் கொண்டபோது, தம்பி, அக்காவின் தலையைக் கோதி விட்டார். "நாங்கல்லாம் இல்லியாக்கா? இந்த மூணு வருஷத்துல, எப்பவாவது ஒன் மனங்கோணும்படியா பேசியிருக்கேனா? அப்படி என்னக்கா பெரிய புருஷன்? அவருக்கு முன்னாலயே நாம ஒண்ணா பிறந்து ஒண்ணா பழகுனவங்க. ஏக்கா அழுவுற? அட வாக்கா. சரிதான். அந்த மனுஷன் கிடக்கான்.” இருவரும் மெளனமாக வீடு நோக்கி நடந்தார்கள். 'பெரியம்மா!' அவளை ஒரு குரல் அழைத்தது. பக்கத்து ஊரிலிருந்து குளோரியின் மகன், "பெரியம்மா! அக்கா உங்களைப் பிராத்தனைக்கு அழைச்சிட்டு வரச் சொன்னாங்க. குழந்தைக்கு உடம்பு சுரமா கொதிக்குது." என்றான். பிராத்தனை ஊராருக்குப் பிரார்த்திக்கும் நிலையிலா கர்த்தர் அவளை வைத்திருக்கிறார்? அவள் குமுறினாள். "வருவதற்கில்லை. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது. கர்த்தரே! ஊராருக்காப் பிராத்தனை செய்யும் எனக்கு இப்படிப்பட்ட பரிதாபு நிலையை ஏற்படுத்திவிட்டீர்களே.