பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

15

குடுத்தனங்களும் மூக்கில் விரலை வைத்தார்கள். சட்டென்று திருநீர்மலையில் கல்யாணமும் ஆயிற்று. செலவெல்லாம் கங்கம்மாவினுடையது. பெண் வீட்டார் கைகளை வீசிக் கொண்டு வந்து சாப்பிட்டுவிட்டுப் போனர்கள்.

சாயிராமும் வந்தான். பட்டுப்புடவையும், ப்ளவுசும் ஆசீர்வாதம் பண்ணினான். “மாப்பிள்ளை சார்! நீங்க கொடுத்து வச்சவர்.. பூஜை பண்ணியிருக்கனும் எங்க நர்மதாவைக் கல்யாணம் பண்ணிக்க. கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தா அவளைப்பெரிய ஹீரோயின் ஆக்கி இருப்பேன்... ஹும்...” என்று நெடிய மூச்சு விட்டான்.

உண்மையிலேயே அழகியான நர்மதா அந்த அழகைத்தான் ஆராதிக்கப் போகிறான் என்று பகலெல்லாம் கனவில் லயித்திருந்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. அந்த வயதுக்கே உரிய போக்குதான் அது.