பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

அலை தந்த ஆறுதல்

கிட்டு, தெருக்கூத்துல இருக்றாப்ல படுதாவக் கட்டு கிட்டு நிக்ற பெரிய மனுசா!...கருமம்! போய்யா... இன்னமே இங்க நின்னுகிட்டேயிருந்தே மரியாதை கெட்டுப்போயிடும் ஆமாம்! ஜாக்ரதை வெட்டி மடவாய்ல வச்சுப் புடுவேன்! இந்த செங்கமலத்தப் பத்தி ஒனக்கு ஒண்னும் தெரியாது. (முத்துக்காளை வந்துகொண்டே)

முத் என்ன செங்கமலம்? யாரு பய? ஏன் இங்க வந்து குத்துக்கல்லு மாதிரி நிக்கறான்...எதுக்கு வந் தானாம்? அவனுக்கு ஏதாவது போதாத காலமா?

செங் ஒன்னியத்தான் தேடி வந்திருக்கானாம். இந்தப் பயலுவளையெல்லாம் நம்பாதே மச்சான்! முன்ன ஒருபய இப்பிடித்தான் வந்தான். வூட்டுக்குள்ள போய் திரும்பறத்துக்குள்ள நம்ப கோளிக்குஞ்சு ரெண்டைக்காணோம்...ஜாக்ரதை கண்ட பயலுவ ட்ெடல்லாம் வாய் கிளிய பேசித் தொலைக்காதே!

பன் (தனக்குள்) ; போயும் போயும் கோளிக்குஞ்சுதான் திருடனுமா? (முத்துக் காளையை நோக்கி) ஐயா! நான் யாருன்னு தெரிஞ்சுகிட்டா இப்பிடியெல்லாம் பேச மாட்டீங்க...

முத் நீ யாரா இருந்தா என்னய்யா! தொறக்காதே

வாயை!

செங் மூணாவது ஆட்லதானெ நாட்டாமை இருக்காரே! அவருகிட்ட இளுத்துக்கிட்டு போய் வுடு...பெரிய மனுஷன்...வெவரந் தெரிஞ்சவரு.இவனுவகளுக் கெல்லாம் புரியராப்லசொல்லுவாரு...நமக்கெதுக்கு ஊர்ப் பொல்லாப்பு.