பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 ஆகாயமும் பூமியுமாய்... முனையில் வீசியெறியப்பட்ட விஸ்கி வகையறா பாட்டில்கள். சிங்காரப் பகுதியிலிருந்து உடலாலும், கூனிக்குறுகிய உருவம் ஒன்று முக்காடு போட்டபடி, சாலையைப் பார்த்து நகர்ந்து கொண்டிருந்தது. நான்கடிக்கு ஒரு தடவை நின்று நின்று, திரும்பிப் பார்த்தபடி, விருப்பத்திற்கு விரோதமாக, ஏதோ ஒரு அசுர சக்தியால் தள்ளப்பட்டது போல் நடந்து கொண்டிருந்தது. தொலைவில் கேட்ட விசில் சத்தம், தனக்காக இருக்குமோ என்று சந்தேகப்பட்டது போல், மரங்களுக்கு மறைவில் நின்று கொண்டது. கையில் ஒரு பை. மெய்யில் பை போன்ற பழுப்படைந்த ஆடை விளக்கு எரிந்தாலும், எரியாவிட்டாலும் தன் கண்களுக்கு அது ஒன்றுதான் என்பதுபோல், பல்பு போன கம்பத்திற்கு அருகே வரும்போதும் சரி. அந்த உருவம் தட்டுத் தடுமாறியபடியே திட்டில் ஏறுவது போல் காலை உயரமாய்த் தூக்கி வைத்தபடியே நகர்ந்து கொண்டிருக்க: எதிர்ப்புறத்துப் புதர் பகுதியிலிருந்து காலில்தான், கண்ணிருப்பது போல் தலை முடியை முக்காடு போல் சுருட்டி வைத்துக் கொண்டு இன்னொரு உருவம் நடந்து கொண்டிருந்தது. கருவேல மரக்கிளைகளை விலக்கியபடி, பொத்துகளுக்குள் சிக்கிய கால்களை லாவகமாக எடுத்தபடி, கூக்குரலிட்ட ஆந்தைகளை சட்டை செய்யாதபடி, கண்ணுக்கு நேராய்ப் பாய்ந்த வெளவால்களைத் தலையை ஆட்டியே துரத்தியபடி, தலைவிரி கோலமாய்த் தான் நடத்தது. இரண்டு உருவங்களும் சாலையின் இரு புறத்திலும் நின்றபோது, ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு, சற்று பின்வாங்கப் போயின. புதர் பகுதியில் இருந்து தோன்றிய உருவம், எதிர்ப்புறத்து உருவத்தை அதட்டப் போனது. பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை, அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பின் சிமெண்ட் பெஞ்சின் முனையில் உட்கார்ந்து கொண்டது. எதிர்த்திசை உருவம், சிறிது