பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 நித்திய பாலன் டாடி ஸ்கூட்டர் லிப்ட் கொடுக்கணும் என்று அடம் பிடிப்பான். ரமேஷ்! என்னோட. நீ நடந்து வரணும். ஸ்கூல்ல விடறேன்' என்றால் எத்தனை தடவையும் எத்தனை நாட்களும் நடப்பான். சாதம் வாணாம் போ' என்பவனிடம், இந்த மாமா போனால், சாதம் அவன் வாய்க்குள் தானாகப் போகும். இதனால் அந்தக் குடும்பத்துக்கும், எனக்கும் பிரச்சினைகள் ஏற்படாமல் இல்லை. ஒரு நாள் ரமேஷ் என்னிடம் அழுது கொண்டே வந்தான். "மம்மி. நீங்க. சாப்பிட்ட தட்டைக் கழுவலேன்னு டாடிக்கிட்ட திட்டறாங்க என்று, நான் கேட்காமலே சொன்னான். நான் திடுக்கிட்டேன். இருந்தாலும் அவனை, என்னால் பிரிய முடியாது என்பதால், அவன் அம்மாவின் அந்நியபாவத்தைத் தாங்கிக் கொண்டதோடு, சாப்பிட்ட தட்டையும், ஒரு தடவைக்கு இரு தடவையாவது கழுவினேன். என் செல்ல ரமேஷின், எச்சில் வாயையும், எந்தவிதப் பலனையும் எதிர்பார்க்காமல் கழுவுவேன். இன்னொரு நாளும், ரமேஷ் ஒரு பிரச்சினையைக் கொண்டு வந்தான். என் அறைக்குள் வந்து "மாமா. இந்த புக்க அக்காகிட்ட கொடுக்கப் போனேனா. மம்மி. இதை நன்னாப் பிரிச்சுப் பார்த்துட்டு. அதுகிட்ட கொடுக்குது" என்று நிர்மலமாகச் சொன்னான். நானும், மாமியின் செயலைப் பிரித்து பார்த்தேன். அவள், சந்தேகப்படுகிறாள். ஒரு தாய் என்ற முறையில், அதைக் குறை கூற நான் விரும்பவில்லை. அதே சமயத்தில், நான் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ரமேஷின் தமக்கை, பி.ஏ. ஹானர்ஸை முடித்துவிட்டு, ஐ.சி.ஆர்.ஐ.யில் ரிசர்ச் செய்கிறாள். என்றாலும், அவள் முகத்தில் தோன்றும் மாற்றங்களை ரிசர்ச் செய்துகூட கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு உணர்ச்சியே இல்லாதவளான