பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 வீட்டுக் கணக்கும். ஆகாயக் கணக்கும். 'ஒங்க மூடத்தனத்தை.... தப்பு தப்பு. அப்பாவித்தனத்தை நெற்றியில் பார்த்துட்டுத்தான் பிரபஞ்ச தத்துவத்தை விளக்கினேன். குவளை நீரை, கடலாய் நினைக்கும் எறும்பான ஒங்களை தற்காலிக தத்தளிப்பில் இருந்து. நித்தியத்திற்கு கரையேற்றவே விளக்கினேன்.” பொன்னம்பலம் அந்த மனிதரை நிமிர்ந்து பார்த்தார். நைந்து போன சாதாரண வேட்டி. புனியன் போடாத தொள தொளப்பான சட்டை. இந்த லட்சணத்தில் கைதட்டிச் சிரித்தார். அந்த சிரிப்பு பைத்தியத்திற்கும், ஞானத்திற்கும் வரப்பான வினோதச் சிரிப்பு. சிறிது நேரம் சிரித்து, முடித்துவிட்டு. பொன்னம்பலத்தின் பிரமிப்பைக் கலைப்பதுபோல் பேசினார். "இந்த பூமிக் கோளம் தோன்றிய நாளில் இருந்து ஆன்மீகத் தேடலுக்கு இரண்டு விழிகள் கிடைத்தன. ஒன்று மெய்ஞானம். இன்னொன்று விஞ்ஞானம். மெய்ஞானத்தை மதம் சிறையிலிட்டது. ஆனால் விஞ்ஞானத்தை அதன் ஏவலாளிகளான எங்களைப் போன்ற ஆகாயக் கணக்கர்களை யாராலும் சிறையிட முடியாது." "இதையெல்லாம் என்கிட்டே ஏன் சொல்றீங்க?" 'காரணம் இருக்கு. தீர்க்க வேண்டிய கணக்கும் இருக்குது. விடையும் கிடைக்குது. இப்படிப்பட்ட பிரபஞ்சத்தில், காளை வாகனத்தில் சிவன் இருப்பாரா? ஒரு அரக்கனுக்கு வரம் கொடுத்து விட்டு பயந்து பேடியாய் திரிவாரா? எல்லையற்ற பிரும்மத்தை படைத்த அல்லா கெட்டவர்களை நரகமிட்டு நல்லவர்களுக்காய் சொர்க்க மிட்டு அங்கே ஒருவரின் நல்லியல்புக்கு ஏற்ப கைபடாத மலர், கைபட்ட மலர் என்று படைக்கப்பட்ட பெண்களை, காமம், துலங்க வைப்பாரா? இயேசு என்பவர் பரிசுத்த ஆவிக்கும் கன்னிமேரிக்குமாய் பிறந்தவராம். நம்பணுமாம்