பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 95 அவனைப் உந்துவது போலிருந்தது. பட்டென்று சொன்னான். "அந்தக் கிளியை விட்டுடு அதை முடக்கிப் போட நமக்கு உரிமை இல்ல." "என்ன மச்சான் நீ! கூண்டு கூட செய்துட்டேன். எப்படி விட முடியும்?" "நீ விடப்போறியா? இல்ல உன்னை இந்தக் கிணத்துல தூக்கிப் போடணுமா?" ராமன், சிறிது நகரப்போனான். வேல்சாமி அவனை நெருங்கினான். ராமன் கிளியை விட்டுவிட்டான். அதேசமயம் யோசித்தான். வேல்சாமிக்குப் பைத்தியம் முத்திட்டு. ஊர்ல சொல்லணும். உடனே சொல்லணும். வேல்சாமியும் யோசித்தான். . ஒன்றின் அன்பு, இன்னொன்றின் அழிவாகக்கூட ஆகலாமோ! அழிவை ஆட்டிப் படைப்பதும் அன்பு தானே! இதனால்தான் அன்பின் ஊற்றான ஈஸ்வரன் அழிவுக் கடவுளாய் சுடலைப் பொடி பூசுகிறானோ? வேல்சாமி, அடியோடு மாறிவிட்டான். யாரிடமும் பேசுவதில்லை. இதை, பலர் பைத்தியத்தின் இன்னொரு கட்டம் என்று நினைத்து, அடுத்த உச்சக்கட்டத்தை, ஆவலோடு எதிர்பார்த்தார்கள். வேல்சாமியும், தாத்தாவின் நூல்கள் அனைத்தையும் ஆவலோடு படித்தான். இடும்பனுக்கு அடுத்த படியானவன் என்று சொன்னதாலோ என்னவோ, நூலகம் போய், பல புத்தகங்களை இடும்ப வேகத்தில் படித்தான். நாத்திவாதிகளின் நூல்களையும் படித்து, அவர்களும் சமூகத்தின் மீதிருந்த அன்பாலேயே, கடவுள் மறுப்புத் தத்துவத்தைத் கையாண்டிருக்கிறார்கள் என்று நினைத்தான். எல்லாவற்றையும் ஓரளவு படிக்கப்படிக்க, அவனால் அவற்றை எடை போட முடிந்தது. இதனால் தனக்கென்று, ஒரு ஆன்மீக வடிவத்தையும், சமூக நோக்கையும் அமைக்க முடிந்தது. தாத்தா, முன்பு செய்த பல யோகப் பயிற்சிகளில்