பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 பக்த கேடிகள் நாரதர் இருகுமாரன்களையும் பார்த்து, அவர்களது மெளனச் சம்மதத்தால் உற்சாகப்பட்டு மேலும் தொடர்ந்தார். 'உங்கள் பக்தர்கள் எவ்வளவு பெரிய போர்ஜரி பேர்வழிகள் என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் நாயகம் என்பவனோ கை சுத்தமானவன். ஆகையால் உங்களைக் கும்பிட முடியவில்லை. நேர்மையானவன் இதயத்தில். ஆகையால் உங்களை அங்கே பூஜிக்கவில்லை. மனிதனையும் மரம் செடி கொடிகளையும் நிஜமென்று நம்புகிறான். இறக்கும்வரை. சேவையே, பக்தி எனக் கருதுகிறான்..... இதனால் பக்தியை சேவையாய் நினைக்கவில்லை." ஆனாலும் அவன் நாத்திகன் ஆயிற்றே: இப்போது முருகனும், ஐயப்பனும் ஒன்றுபட்டு நாரதர் கருத்தை ஆட்சேபித்தார்கள். ஆட்சேபத்திற்குரியவர் அன்போடு பதிலளித்தார். 'இருக்கட்டுமே. மக்களிடம் ஈடுபாடு காட்டுகிறானே. அது பூஜையை விட பெரிய பூஜை அல்லவா? அதோ அந்தக் கிழ வீ... அவனை எப்படி கையெடுத்துக் கும்பிடுகிறாள் பாருங்கள் கும்பிடத் தகுதியாக அவன் இருப்பதால்.... அவன் உங்களைக் கும்பிடவில்லை. கண்ணுக்குத் தெரியாத உங்களை. சொந்த லாபத்திற்காக கும்பிடும் உங்கள் பக்தர்களைவிட அவன் மேலானவன் அல்லவா? நீ சொல்வது ஒரு வகையில் சரிதான். ஆனால் என் பக்தன். பழனிக்கு மூன்றாண்டுகளுக்கு . நாக்கில் வேல் குத்தி வருவதாக நேர்த்திக் கடன் செய்திருக்கிறானே. 'என் பக்தனும். சாகும்வரை. சபரிமலைச.கு வருவதாய் வாக்களித்திருக்கானே.”