பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 நித்திய பாலன் இருந்தாலும், என்னைப் பாசம் விடவில்லை. ரமேஷ்' என்று சொல்லிக் கொண்டே, அவனைப் பழைய ரமேஷாகப் பாவித்துக் கொண்டே கண்ணiர் மல்க, கட்டியணைக்க எழுந்தேன். அப்போது எதேச்சையாக நகர்ந்த ரமேஷ், "இது யாரு மம்மி?” என்றான். மம்மியான மாமி விளக்கினாள்: 'நான் அடிக்கடி சொல்வேனே..... அங்கிள்... சுப்ரமணியன். அது இவர்தாண்டா. ஒன்னை எடுத்து வளர்த்தவருடா. ஒனக்கு. அவருன்னா. உயிருடா. அடையாளம் தெரியலையா?" ரமேஷ், சிறிது யோசித்தான். பின்னர், "யெஸ். ஐ. குட் ரிகலெக்ட். ஷேடோ மாதிரி தெரியுது. ஹெள டுயூடு அங்கிள்" என்று சொல்லிக் கொண்டே என் கையைப் பிடித்துக் குலுக்கினான். பிறகு, "மம்மி. நான் லைப்ரரி வரைக்கும் போயிட்டு வரேன். ஒரு சேஸ் நாவல் வாங்கிட்டு வரணும். ஓ.கே. அங்கிள். பை. பை" என்று சொல்லிக் கொண்டே போய்விட்டான். நான், அவன் போவதையே வெறித்துப் பார்த்தேன். அமங்கலமாகச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும். என் ரமேஷ், என் பத்து வயது இனிய ரமேஷ் - காணாமல் போய்விட்டான். நிஜமாகவே நிழலாகி விட்டான். அந்தக், குழந்தை பெரியவனாகி விட்டது நியாயம். பெரியவனான நான், குழந்தையானதுதான் தப்பு. மகாத்தப்பு! மாமி காப்பியுடன் வந்தாள். "இந்த குவார்ட்டர்ஸ் நல்லா இருக்கா தம்பி? நீ இருக்கையில. சின்ன குவார்ட்டர்ஸ். இது பியூட்டிஃபுள். ஸ் இட் நாட்?" இஸ் இட் ந நான் அர்த்தத்தோடு சொன்னேன். "ஆமாம் மாமி. முன்னே இருந்ததைவிட. இது பெரிய குவார்ட்டர்ஸ். ஆனால் எனக்கென்னமோ.. அதான்