பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 ஆத்மாவின் ராகங்கள் போராட்டம் என்ற நோன்பில் இறங்கியதோ அந்த நோன்பில் - அந்த நோன்பின் பயன் விளையுமுன்பே தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் பிரிய வழி ஏற்பட்டு விட்டது. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டதற்காகப் பல மூத்தவர்கள் ராஜாஜி மேல் கோபப்பட்டார்கள். சிலர் ராஜாஜி மேல் தப்பில்லை என்று விலகியும் போனார்கள். விலகிப் போனவர்கள் ராஜாஜிக்கு ஆதரவாகச் சீர்காழியில் ஒரு

கூட்டம் போட்டார்கள். கோஷ்டி மனப்பான்மை வளரலாயிற்று. -

大 x ★

ராஜாராமன் விடுதலையாகி மதுரைக்குத் திரும்பிவந்த போது அவன் எதிர்பாராத பல மாறுதல்கள் அங்கே நேர்ந்திருந்தன. சில மாறுதல்கள். அவன் அநுமானித்தவை தான் என்றாலும், பல மாறுதல்கள் அவன் அநுமானிக்காதவை என்பதோடு மட்டும் அல்லாமல், அவனுக்கு அதிர்ச்சியளிப்பவையாகவும் இருந்தன. தாடியும் மீசையுமாக இளைத்த உடம்பும், குழி விழுந்த கண்களுமாக அவன் மேலக் கோபுர வாசலில் வந்து நின்ற போது, தெரிந்தவர்களுக்கும் கூட அவனை முதலில் அடையாளம் புரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பின் மதுரை மண்ணை மிதிக்கும் சந்தோஷம் உள்ளே இருந்தாலும் அவன் மனத்தில் இனம் புரியாத கலக்கங்கள் ஊடாடின. நெஞ்சு எதற்காகவோ ஊமைத் துயரத்தால் உள்ளேயே புலம்பியது. மேலச் சித்திர்ை வீதியில் வடக்கு நோக்கித் திரும்பித் தெரு முனையில் போய்ச் சிறிது தொலைவு நடந்ததுமே அவனுக்குத் திக் கென்றது. வாசகசாலை இருந்த மாடியே இல்லை; ஒரு புதிய பெரிய மாடிக் கட்டிடம். அந்த இடத்தில் ஒரு பல சரக்கு மளிகைக் கடை வந்திருந்தது. மாடியில் ஏதோ ஒரு ஃபவுண்டரி இரும்பு சாமான்கள், பம்பு செட் விற்கும் கம்பெனியின் போர்டு தெரிந்தது. சந்தில் நுழைந்து, மதுரத்தின் வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாமா, மளிகைக் கடையிலேயே விசாரிக்கலாமா என்று.அவன் கால்கள் தயங்கி நின்றது. கில்ட் கடையும், வாசக சாலையும்