பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 நித்திய பாலன் கோபப்படவில்லை. அன்று வத்தல் குழம்போடு, நெய்யரிசிச் சோறும், உருளைக்கிழங்கு பொரியலும், தந்த அந்த உத்தமர், என்னை அட.. அற்பா என்றிருந்தாலும், செஞ்சோற்றுக் கடனுக்காக, செவிகளைக் கல்லாக்கி கொண்டிருப்பேன். கரோலபாக்கிலிருந்து அரிசிச் சோற்றுக்காக ஆர்.கே.புரம் அடிக்கடி போன தான், பின்னர் அந்தப் பையன், ரமேஷைப் பார்ப்பதற்காக மட்டுமே போனேன். அவனும், என்னுடன் ஒட்டிக் கொண்டான். ஒரிரு தடவை, கரோல்பாக்கிற்கு அவனை அழைத்து வந்தேன். "டாடி. மாமா.மெஸ்ல. சப்பாத்தியத் தின்னுட்டு. துப்பினேன்" என்று, அவன் சொன்னதைக் கேட்டுவிட்டு , மிஸ்ஸஸ் வேங்கடராமனிடம், என் சித்தப்பாவின் 'கிளாஸ் மேட் காதைக் கடித்தார். இதற்கிடையே, எனது கடிதத் தூண்டலி ல் என்னுடைய சித்தப்பாவும், அவருக்கு வாழ்நாளிலே முதன் முதலாகக் கடிதம் போட்டார். நானும், என் பங்குக்கு பர்ஸாத்தி வெயிலின் வெங்கொடுமை சாக்காட்டைப் பற்றி, எவ்வளவு கொடுரமாகச் சொல்ல முடியுமோ, அவ்வளவு கொடுரமாகச் சொல்லி விட்டேன். நினைத்தது நடந்தது. நான், கரோல் பாக்கிலிருந்து, ஆர்.கே.புரத்துக்கு அவர்கள் குவார்ட்டர்ஸ்-க்கே போய் விட்டேன். பிரத்தியோகமாக இருந்த ஒர் அறையைத் தந்தார்கள். வாடகையை அவர்கள் கேட்கவில்லை என்றாலும், நானாகக் கொடுத்தேன். எனக்கு வயிறோடு மானமும் இருந்ததால், நிரந்தரமாகச் சாப்பிட மறுத்து விட்டேன். விசேஷமான நாட்களில் மட்டும், அங்கே சாப்பாடு. வெங்கட்ராமத் தம்பதி ஆச்சாரமான இந்துக்கள். ஆகையால், ஒவ்வொரு மாதத்திலும், விசேஷ நாட்களின் எண்ணிக்கை, விசேஷமில்லாத நாட்களின் எண்ணிக்கையை விட அதிகம். மெஸ் பில் குறைந்தது. என்றாலும் நான் ரமேஷ-க்கு அன்பினாலும், நாட்களை கணக்கில் வைத்துக்