பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 117 பாடினேன். வீணை வாசிச்சேன்! இதையெல்லாம் செய்ய முடியாதபோது நிறைய அழுதேன்..."

'யாரை நெனைச்சு?

'இப்ப எங்கிட்ட இப்பிடிக் கேட்கிறவர் யாரோ, அந்த மகானுபாவரை நெனைச்சுத்தான்...'

இதைச் சொல்லும் போது மதுரம் சிரித்துவிட்டாள். அவள் பேசும் அழகையும், நாசூக்கையும் எண்ணி எண்ணித் திகைத்து ஒன்றும் சொல்லத் தோன்றாமல் இருந்தான் அவன்.

மத்தியானம் வெளியில் எங்கும் சாப்பிடப் போய்விடக் கூடாது என்றும், அங்கேயே சாப்பிடவேண்டுமென்றும் வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போனாள் மதுரம். மாகாண காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிரகதீஸ்வரன் மதுரை வந்து போவார் என்று எதிர் பார்த்திருந்தான். அவர் வரவில்லை. 'ஏன் வரமுடியவில்லை என்பது பற்றிக் கடிதமாவது எழுதுவார் என்று எண்ணியிருந்ததற்கு மாறாகக் கடிதமும் அவரிடமிருந்து வராம்ற் போகவே, தானே அவருக்கு இன்னொரு கடிதம் எழுதினால் என்ன என்று தோன்றியது. மகாநாடு பிரமாதமாக நடந்ததைப் பற்றியும், அவர் வராததால் தனக்கு ஏற்பட்ட வருத்தத்தைப் பற்றியும் விவரித்துக் கடிதம் எழுதினான் அவன். அதற்குப்பின் ஒர் அரைமணி நேரம் ஒரு வாரமாக விட்டுப் போயிருந்த டைரிக் குறிப்புக்களை ஞாபகப்படுத்தி எழுதினான். . . . -

பகல் உணவுக்குப்பின் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்துவிட்டு, அவன் மேலுருக்குப் புறப்பட்டான். முதலில் திருவாதவூர் போய் நிலத்தையும், குத்தகைக் காரனையும் பார்த்துவிட்டு, அப்புறம் ம்ே லூர் போக வேண்டுமென்று நினைத்திருந்தான் அவன். ஒரு வேளை திரும்புவதற்கு நேரமாகிவிட்டால் இரவு மேலுரில்ேயே தங்கிவிட வேண்டியிருக்கும் என்று தோன்றியது. -