பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஆத்மாவின் ராகங்கள்

நேருவும், சுபாஷ் போஸும் திருத்தப் பிரேரணைகள் கொண்டு வந்ததைப் பற்றியும் - எல்லாம் பிருகதீஸ்வரன் விவரித்துச் சொன்னார்.

கதை கேட்பது போல் எல்லாரும் பிருகதீஸ்வரனைச் சுற்றி அமர்ந்து, அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். லாகூர் காங்கிரஸைப் பற்றியும் சொல்லுமாறு அவரைக் கேட்டான் ராஜாராமன்.

'ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்பதிலே லாகூர் காங்கிரஸ்-க்கு நான் போக முடியலே. அந்தச் சமயம் தான் என் மனைவி இரண்டாவது பிரசவத்துக்குப் பின் ரொம்ப உடம்பு சவுகரியமில்லாமே, பிழைப்பாளோ மாட்டாளோ என்றிருந்தது. போக முடியாமப் போச்சு' என்று வருத்தப்பட்டு கொண்டார் பிருகதீஸ்வரன். குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படுவது போலவே தேசத்தைப் பற்றிக் கவலைப்படும் இந்தப் பவித்திரமான மன நிலையை ஒவ்வொரு இந்தியனும் அடையச் செய்த திலகரும், காந்தியும் எவ்வளவு பெரிய சத்திய சக்தியுள்ளவர்களாயிருக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து வியந்தான் ராஜாராமன். மனைவி உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தும் லாகூர் காங்கிரஸ்-க்குப் போக முடியவில்லையே என்று பிருகதீஸ்வரன் வருந்தியிருப்பதை எண்ணிய போது தேசபக்தி என்கிற மாயசக்தி என்னென்ன காரியங்களைச் சாதிக்கிறதென்று புரிந்துகொள்ள முடிந்தது. வேதகாலத்து இந்தியாவுக்குப் பின் திலகரும் மகாத்மாவும் தேசபக்தி என்னும் ஒரு புதிய தவத்தையே வழக்கத்துக்குக் கொண்டு வந்திருப்பதாகத் தோன்றியது. தனி மனிதனுக்கு முக்தியும் சித்திகளும் அளிப்பதே பழைய தவத்துக்கு இலட்சியங்கள். இந்தப் புதிய தவத்துக்கோ எல்லா இலட்சிய நோக்கமும் தேசமளாவிய பயன்களைத் தருவதாக அமைக்கப் பட்டிருக்கிறது. இந்தப் புதிய தவத்தைச் செய்யும் யோகி களில் இளையவனாக அவர்கள் கூட்டத்தில் தானும் இருக்கிறோம் என்பதை எண்ணி யெண்ணிப் பூரித்தான் ராஜாராமன். சத்தியாக்கிரகம் என்ற பதத் தொடரின்